தமிழ்நாடு

“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க தவெக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் வண்ணமாக இருக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, சிறார் வன்கொடுமை, ஏமாற்று வேலை என அனைத்து குற்றச்சம்பவங்களிலும் பெரும்பாலும் தவெக-வினரே ஈடுபட்டு வருகின்றனர்.

அதோடு தமிழ்நாட்டு மக்களுக்கு என்று எந்த ஒரு நலத்திட்டத்தையும் தொடங்கி வைக்காத தவெக அரசு, மாறாக மின்வெட்டு பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, பால் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, தனியார்மயம், மீனவர்களுக்கு எதிரான செயல்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை, கடற்கரையை ஒட்டியுள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கத் திட்டமிட்டு செப்.8 அன்று அரசாணை வெளியிட்டது தவெக அரசு. சுமார் 25.5 ஏக்கர் பரப்பளவில், ரூ.1,200 கோடி செலவில் உருவாக்கப்படும் இந்த திட்டத்துக்கு அங்கிருக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?

மீனவர்கள் வசிக்கும் பகுதியில் தலைமைச் செயலகம் போன்ற அதிமுக்கிய அரசு அலுவலகம் வந்துவிட்டால், பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு மீனவர்களால் சுதந்திரமாக கடலுக்கு சென்று மீன் பிடிக்க இயலாமல் போய்விடும். மேலும் தலைமைச் செயலகம் அமைந்த பிறகு, பல்வேறு காரணங்களை கூறி, மீனவர்களை வெளியேற்றும் அபாயமும் உள்ளது.

இதன் காரணமாக தவெக அரசின் இந்த திட்டத்துக்கு அங்கிருக்கும் மீனவ மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கறுப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தும் விஜய் அரசு கண்டுகொள்ளாத நிலையில், இன்று (செப்.29) சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு, ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என 56 மீனவ கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தின்போது வயது முதிர்ந்த பெண் ஒருவர் மயக்கமடைந்தார். இதனால் சற்று சலசலப்பு ஏற்பட்ட நிலையிலும், மீனவர்கள் தங்கள் போராட்டத்தை கை விடாமல் தொடர்ந்து மேற்கொண்டனர். மீனவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்த பிறகும், விஜயும், அவரது அரசும் அதனை சற்றும் செவிமடுக்கவில்லை.

“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?

இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த மீனவர்கள், "பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் வருவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மீனவர்களின் போராட்ட வரலாறு தவெக ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை என்றால், அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

அடுத்த 5 நாட்களுக்குள் இந்த அரசாணையை முதலமைச்சர் திரும்ப பெற வேண்டும், இல்லையென்றால் தமிழ்நாடு, புதுச்சேரியை இணைத்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம். எங்கள் மீனவர்கள் வரலாறை முதல்வர் விஜயின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். மீண்டும் 1985 வரலாறை 2026-ல் நடக்க வைக்க வேண்டாம். இது மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை." என்றனர்.

“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?

இதில் "1985 வரலாறை 2026-ல் நடக்க வைக்க வேண்டாம்." என்று மீனவர்கள் கூறிய வரலாறு என்ன என்பதை இதில் பார்ப்போம்.

1985-ல் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக ஆட்சியில், மெரினா கடற்கரையை மேம்படுத்தக் கொண்டு வந்த திட்டம் "மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டம்" (Marina Beach Beautification Scheme / Drive) என்று திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது. இது மெரினாவைச் சர்வதேச அளவிற்குச் சுத்தமாகவும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலும் அழகுபடுத்துவதை நோக்கமாக வைத்திருந்தது.

இந்த திட்டத்தின் எதிரொலியாக அதே 1985, நவம்பரில் அயோத்திக்குப்பம், நொச்சிக்குப்பம் போன்ற பகுதிகளில் மணலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கட்டுமரங்கள், மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை முன்னறிவிப்பின்றி மாநகராட்சி அதிகாரிகளும் போலீசாரும் புல்டோசர்களுடன் இரவோடு இரவாக அகற்றினர்.

இதனால் கொந்தளித்த மீனவர்கள் கடும் போராட்டத்தில் இறங்கினர். எனினும் கண்டுகொள்ளாத எம்.ஜி.ஆர். அரசை கண்டித்து மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வயது முதிர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், போராட்டம் தீவிரமடைந்தது. மீனவர்கள் அனைவரும் விவேகானந்தர் இல்லம் அருகிலிருந்து, மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் இணைந்து சென்னை கோட்டையை நோக்கி பேரணி நடத்தினர்.

“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?

அப்போது கோட்டை வாயிலருகே அயோத்திக் குப்பத்தைச் சேர்ந்த கோதண்டபாணி என்ற இளம் மீனவர் தீக்குளித்தார். கடுமையான தீக்காயங்களோடு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோதண்டபாணி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரது உயிரிழப்புக்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

மீனவர்களின் உயிரிழப்பை தொடர்ந்து மற்ற மீனவ கிராமத்தினும் ஒன்று கூடி தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் மீனவர்களின் இந்த போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில், போலீசாரை வைத்து எம்.ஜி.ஆர். ஆட்சி மிரட்டியது. எனினும் மீனவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து போராட்டத்தை மேலும் பலப்படுத்தினர்.

இப்படியான சூழலில் ஒரு மாதமாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்கள் மீது டிசம்பர் 4-ம் தேதி காமராஜர் சாலையில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தின்போது போலீசார் மீனவர்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். அதோடு மீனவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடும் நடத்தினர்.

“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?

காவல்துறை மீனவர்களை நோக்கி 17 முறை துப்பாக்கியால் சுட்டது. இந்தக் கொடூர சம்பவத்தில் 5-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, 19 பேர் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டனர். 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 41 மீனவர்களை கைது செய்து காவலில் வைக்கப்பட்டனர்.

இதனிடையே மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மீனவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து உச்சநீதிமன்றத் தலையீட்டின் பேரில் 1985 டிச.10 அன்று பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளையும் வலைகளையும் மீனவர்களிடமே எம்.ஜி.ஆர். அரசு திருப்பி ஒப்படைத்ததோடு, மெரினாவிலிருந்து மீனவர்களை அகற்றும் திட்டமும் கைவிடப்பட்டது. தற்போதும் கூட ஒவ்வொரு ஆண்டும் டிச.4 அன்று மெரினா மீனவர்கள் 'தியாகிகள் தினமாக' நினைவுகூர்ந்து வருகின்றனர்.

1985 வரலாறை தற்போது நடக்க வைத்து விடாதீர்கள் என்று மீனவர்கள், இந்த மாபெரும் போராட்டத்தையே குறிப்பிட்டு, முதலமைச்சர் விஜய்க்கு எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories