தமிழ்நாடு

குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!

சென்னை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலை செல்லும் பிரதான சாலையில், நாகல்கேணி அருகே ஒரு கும்பல் சட்டவிரோதமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகச் சங்கர் நகர் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, ஐந்து பேர் அடங்கிய கும்பல் ஒன்று அவ்வழியாகச் செல்லும் இளைஞர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது. துரிதமாகச் செயல்பட்ட போலீசார், அந்த நபர்களை மடக்கிப் பிடித்து, சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், அவர்கள் குரோம்பேட்டையைச் சேர்ந்த அமீர் (28), சிவமணி (22), பால்ராஜ் (30), அபிஷேக் (21) மற்றும் முகமது ஆயுப் கான் (24) என்பது தெரியவந்தது. மேலும், போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களில் அபிஷேக், சேலையூரில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ. (BCA) மூன்றாம் ஆண்டு படித்து வருவதும், மற்றவர்கள் பெயிண்டர், பொறியாளர் (இன்ஜினியர்), மார்க்கெட்டிங் போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில், ஆந்திராவில் இருந்து மொத்தமாகக் கஞ்சாவை விலைக்கு வாங்கி வந்து, அதைச் சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து அதிக விலைக்கு விற்றுப் பணம் சம்பாதித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்து விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களைத் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப் புழல் சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories