தமிழ்நாடு

நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு; சமரசமின்றி போராடுவோம்: #BanNEET இயக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் அறைகூவல்!

நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் முன்னெடுத்துள்ள #BanNEET இயக்கத்திற்கு கழகத் தோழர்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆதரவளித்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு; சமரசமின்றி போராடுவோம்: #BanNEET இயக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் அறைகூவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன. ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

நீட் எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கிய முகமாக அரியலூர் மாணவி அனிதா மாறினார். 2017-ல் உயிரிழந்த அனிதா, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,200-க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற கனவுடன் இருந்தார். நீட் அடிப்படையிலான மருத்துவச் சேர்க்கையில் மருத்துவ இடம் கிடைக்காத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அனிதாவின் மரணத்துக்குப் பிறகு, அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த திமுக, நீட் தேர்வுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை மேலும் தீவிரப்படுத்தியது. குறிப்பாக, நீட் தேர்வுக்கு எதிராக திமுக பல்வேறு கட்டங்களில் போராட்டங்களையும், சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

2017-ல், மாநிலம் முழுவதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டதுடன், தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.

நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு; சமரசமின்றி போராடுவோம்: #BanNEET இயக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் அறைகூவல்!

2021-ல், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு கோரும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆளுநரால் மசோதா திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், 2022-ல் மீண்டும் சட்டப்பேரவையில் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

மேலும், நீட் தேர்வில் தகுதி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவச் சேர்க்கையில் 7.5% முன்னுரிமை வழங்கும் நடைமுறை தொடரப்பட்டது. இந்த முன்னுரிமையின் கீழ் மருத்துவ இடங்களைப் பெறும் மாணவர்களின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

2024-ல், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு போராட்டம், சட்டப்பேரவை நடவடிக்கை, சட்ட முயற்சி மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% முன்னுரிமை என பல்வேறு வழிகளில் திமுக நீட் விவகாரத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு; சமரசமின்றி போராடுவோம்: #BanNEET இயக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் அறைகூவல்!

அதன் தொடர்ச்சியாக, நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் “நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் – தமிழ்நாடு” அமைப்பின் நிர்வாகிகள், இன்று (21-09-2026) காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தனர்.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் தொடக்கம் முதலே உறுதியோடும் சமரசமின்றியும் செயல்பட்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தாங்கள் மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் மற்றும் அடுத்தகட்ட முயற்சிகள் குறித்து கூட்டியக்கத்தினர் விளக்கி, அவரது ஆதரவைக் கோரினர்.

குறிப்பாக, நீட் எதிர்ப்பை தமிழ்நாட்டைக் கடந்து இந்திய அளவில் வலுப்படுத்தும் வகையில் #BanNEET இணையவழிக் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுப்பது, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் விழிப்புணர்வுக் காணொலியை வெளியிடுவது, சமூக வலைதளங்கள் வாயிலாகப் பரப்புரை மேற்கொள்வது, அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள், சமூக இயக்கங்கள் மற்றும் கல்வி உரிமைக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட தங்களது செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்து ஆதரவு கோரினர்.

நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் – தமிழ்நாடு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், #BanNEET இணையவழிக் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு தனது ஆதரவையும் பதிவு செய்தார்.

நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு; சமரசமின்றி போராடுவோம்: #BanNEET இயக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் அறைகூவல்!

இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு சமூக வலைதளப்பதிவில், “NEET என்பது தேர்வல்ல; எத்தனையோ மாணவர்களின் சிதைக்கப்பட்ட கனவுகள்! குடும்பங்களின் கண்ணீர்!

அதனால்தான் சமரசமின்றி, தொடக்கம் முதலே “NEET ஒழிப்பே நிரந்தரத் தீர்வு!” என்று போராடி வருகிறோம்.

அந்த இலக்கோடு #BanNEET இயக்கத்தை முன்னெடுத்துள்ள நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் – தமிழ்நாடு தோழர்களை இன்று சந்தித்து, அவர்களது கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு என் ஆதரவைத் தெரிவித்தேன்.

இது அரசியல் வேறுபாடுகளைக் கடந்த, நம் மாணவர்களின் எதிர்காலத்துக்கான போராட்டம். எனவே, கழகத் தோழர்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த இயக்கத்திற்கு ஆதரவளித்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories