அரசியல்

#BANNEET என்னும் இலக்குடன் ‘கையெழுத்து இயக்கம்’ தொடக்கம்! - உயிர்க்கொல்லியை நீக்க மாபெரும் முன்னெடுப்பு!

‘நீட்’ என்னும் தமிழ்நாட்டிற்கு ஒவ்வாத நுழைவுத்தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, மாபெரும் இணையவழி கையெழுத்து இயக்கம் தொடக்கம்.

#BANNEET என்னும் இலக்குடன் ‘கையெழுத்து இயக்கம்’ தொடக்கம்! - உயிர்க்கொல்லியை நீக்க மாபெரும் முன்னெடுப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டின் கல்வித்தரம் பிற மாநிலங்களைவிட உயர்ந்திருக்கும் நிலையில், மாநிலத்தின் கல்வியை ஊக்குவிக்காமல் மாணவர்களை வஞ்சிக்கும் நடவடிக்கைகளைத்தான் ஒன்றிய பா.ஜ.க அரசு முன்னெடுத்து வருகிறது.

குறிப்பாக, பள்ளிக் கல்விக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியில் பற்றாக்குறை, தாய் மொழிக் கல்வியை புறந்தள்ளும் இந்தித் திணிப்பு, தமிழ்நாட்டுக் கல்விக்கு ஒவ்வாத வகையில் நுழைத்தேர்வுகள் என ஒன்றிய பா.ஜ.க அரசின் வஞ்சகப்போக்கு, கடந்த 11 ஆண்டுகளில் உச்சம் தொட்டுள்ளது.

இவ்வஞ்சக நடவடிக்கைகளில் முதன்மையானதாக ‘நீட் நுழைத்தேர்வு’ அமைந்துள்ளது. இத்தேர்வின் தாக்கத்தால், தமிழ்நாட்டில் உயிர்நீத்தவர்கள் ஏராளம்.

இந்த இழப்புகள் இனியும் தொடரக்கூடாது என்பதை முன்னிறுத்தி, தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

#BANNEET என்னும் இலக்குடன் ‘கையெழுத்து இயக்கம்’ தொடக்கம்! - உயிர்க்கொல்லியை நீக்க மாபெரும் முன்னெடுப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில், நீட் தேர்விற்கு எதிராக தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டும், அதற்கு இதுவரை ஒன்றிய அரசு செவி சாய்க்காதது, பா.ஜ.க.வின் அக்கறையின்மையை வெளிப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தி.மு.க முன்னெடுத்திருந்த நீட் தேர்வு நீக்கம் கோரிய ‘கையெழுத்து இயக்கம்’ போன்ற ஒரு கையெழுத்து இயக்கம், அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தற்போது தமிழ்நாடு நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பில் செயல்படத் தொடங்கியுள்ளது.

இணையம் வழித் தொடங்கியிருக்கும் இவ்வியக்கத்திற்கு வலு சேர்க்கும் வகையில், நீட் எதிர்ப்புக் கூட்டியக்கத்தின் கையெழுத்து இயக்கத்தில், தனது கையெழுத்தையும் பதிவிட்டு, நீட்டிற்கு எதிரான அறப் போராட்டத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“NEET என்பது தேர்வல்ல; எத்தனையோ மாணவர்களின் சிதைக்கப்பட்ட கனவுகள்! குடும்பங்களின் கண்ணீர்!” என்பதை சுட்டிக்காட்டி சமரசமின்றி ஒன்றுபட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் ஆதரவுக் கோரியிருக்கிறார்.

இதன் வழி, கட்சி வேறுபாடுகள் களைந்து, இந்த இயக்கம் மக்கள் இயக்கமாக மாறி, நீட் என்னும் உயிர்க்கொல்லியை நீக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories