தமிழ்நாடு

ஏழைகளுக்காக ரூ.1 இட்லி... பாட்டி கமலாயிக்கு நிறுத்தப்பட்ட இலவச சிலிண்டர்: வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?

கோயம்புத்தூரில் பல ஆண்டுகளாக ஏழை எளிய மக்களுக்கு வெறும் ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி வரும் மூதாட்டி கமலாத்தாள் அவர்களுக்கு, வழங்கி வந்த இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் உதவி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

ஏழைகளுக்காக ரூ.1 இட்லி... பாட்டி கமலாயிக்கு நிறுத்தப்பட்ட இலவச சிலிண்டர்: வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோயம்புத்தூரில் பல ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்கு வெறும் ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி சமூக சேவையாற்றி வரும் மூதாட்டி கமலாத்தாள் அவர்களுக்கு, வழங்கப்பட்டு வந்த இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் உதவி திடீரென நிறுத்தப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையின் அடையாளமாகத் திகழும் பாட்டி கமலாயி, தனது குறைந்த வருமானத்திலும் பல ஆண்டுகளாக ஏழைகளுக்காக ஒரு ரூபாய் இட்லி விற்பனை செய்து வருகிறார். இவரது சமூக சேவையைப் பாராட்டி, திமுக ஆட்சியில் எரிவாயு நிறுவனம் சார்பில் கடந்த காலங்களில் இலவசமாக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வந்தன.

ஆனால், கடந்த சில மாதங்களாக அந்த எரிவாயு நிறுவனம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இலவச சிலிண்டர் வழங்குவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாகத் தெரிகிறது. இதனால், தனது அன்றாட வியாபாரமும் சேவையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மூதாட்டி கமலாயி வேதனை தெரிவித்துள்ளார்.

ஏழைகளுக்காக ரூ.1 இட்லி... பாட்டி கமலாயிக்கு நிறுத்தப்பட்ட இலவச சிலிண்டர்: வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?

இதுகுறித்து இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்த பாட்டி கமலாத்தாள் அவர்கள், தனக்கு நிறுத்தப்பட்ட இலவச கேஸ் சிலிண்டரை மீண்டும் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கிறேன் என்பதற்காக கம்பெனி காரங்க இதுவரைக்கும் சிலிண்டர் இலவசமாகக் கொடுத்துட்டு இருந்தாங்க. ஆனா, இப்போ ரெண்டு மாசமா திடீர்னு எதையும் சொல்லாம காஸ் குடுக்குறதை நிறுத்திட்டாங்க. இதனால் என்ன பண்றதுன்னு தெரியாம ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருக்கேன்” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை கூறி, திமுக தயவால் வெற்றி பெற்ற கட்சிகளுடன் ஆட்சி நடத்தி வரும் தவெக அரசு, சமூக சேவை செய்து வரும் மூதாட்டிக்குத் தடையின்றி சிலிண்டர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

banner

Related Stories

Related Stories