வைரல்

கோவை 1 ரூபாய் இட்லி பாட்டிக்கு அன்னையர் தினத்தன்று சர்ப்ரைஸ் கொடுத்த ஆனந்த் மஹிந்திரா.. வைரலாகும் வீடியோ!

30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் கமலாத்தாள் பாட்டி, தன் வாழ்நாள் வரை ஒரு ரூபாய்க்கே இட்லி விற்பேன் என்றே கூறியுள்ளார்.

கோவை 1 ரூபாய் இட்லி பாட்டிக்கு அன்னையர் தினத்தன்று சர்ப்ரைஸ் கொடுத்த ஆனந்த் மஹிந்திரா.. வைரலாகும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவையைச் சேர்ந்த ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் கமலாத்தாள் பாட்டிக்கு வீடு கட்டி கொடுத்து அன்னையர் தினமான இன்று அதனை பரிசாகவும் அளித்துள்ளார் மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா.

கோவை மாவட்டம் வடிவேலம்பாளயம் பகுதியில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று அப்பகுதி மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் கமலாத்தாள் பாட்டி. 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் கமலாத்தாள் பாட்டி, தன் வாழ்நாள் வரை ஒரு ரூபாய்க்கே இட்லி விற்பேன் என்றே கூறியுள்ளார்.

சுவையான, சுத்தமான முறையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டியின் செயல் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் மத்தியிலும் கமலாத்தாள் பாட்டி பிரபலமானார். அதேபோலவே தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு பாட்டி கமலாத்தார் தெரிய வந்தார்.

அவரது சேவையை பாராட்டும் வகையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு வீடு கட்டி தருவதாக ட்விட்டர் வாயிலாக அறிவித்திருந்தார். அதன்படி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா. அதுவும் அன்னையர் தினமான இன்று.

இது தொடர்பாக மஹிந்திரா குழுமம் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய வீட்டை அந்நிறுவன அதிகாரிகள் கமலாத்தாள் பாட்டி வசம் ஒப்படைத்த வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா “ இட்லி அம்மா தாயின் நற்பண்புகளின் உருவகம்: வளர்ப்பு, அக்கறை மற்றும் தன்னலமற்றவர். அவர்களுடைய சேவைக்கு ஆதரவாக இருப்பது பெருமையாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த கமலாத்தாள் பாட்டியின் வீடியோ இதுவரை 2.36 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் மஹிந்திரா நிறுவனரின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories