
சனாதனம் என்ற வார்த்தையைக் கேட்டாலே, இன்றுவரை பிற்போக்குவாதிகளுக்கு எரிச்சல் ஏற்படுகிறது. 2023-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற த.மு.எ.க.ச நிகழ்ச்சி ஒன்றில், முதன்முறையாக சனாதனம் என்ற வார்த்தையைத் அப்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தினார்.
அந்த வார்த்தையைக் கேட்டு எரிச்சல் அடைந்த பிற்போக்குவாதிகள், அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தினர். "நீங்கள் யாருடா என்னை மிரட்டுவது? நான் முத்தமிழறிஞர் கலைஞரின் பேரன்! தி.மு.க-காரன் நான், எதற்கும் அஞ்சமாட்டேன்" என அவர் துணிச்சலுடன் கூறினார்.
தற்போது தி.மு.க இந்தச் சட்டமன்றத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்ததை அடுத்து, "சனாதனத்தை அவமதித்ததால்தான் உங்களுக்கு இந்த நிலைமை" எனப் பிற்போக்குவாதிகள் பலரும் முந்திக்கொண்டு உதயநிதி ஸ்டாலினுக்குப் பாடம் எடுக்கத் தொடங்கிவிட்டனர்.
இனி அவர் சனாதனம் என்ற வார்த்தையையே உச்சரிக்க மாட்டார் என நினைத்த பிற்போக்குவாதிகளின் கன்னத்தில் அறையும்வண்ணம், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுத் தனது முதல் பேச்சில், "வெல்க தமிழ், வாழ்க தமிழ்நாடு! மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்" எனக் கூறி, தி.மு.க-வின் கொள்கையை எப்போதும் நான் கைவிட மாட்டேன் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி" என தெரிவித்துள்ளார்.






