தமிழ்நாடு

நீட் தேர்வு ரத்து - “நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை இன்று ரத்து செய்துள்ளது.

நீட் தேர்வு ரத்து - “நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக எழுந்த புகார்களை தொடர்ந்து,மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை இன்று ரத்து செய்துள்ளது.

இந்நிலையில், நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

”இந்த ஆண்டும் NEET Paper Leak முறைகேடுகள் வெளிவந்து, Exam Cancel ஆகியிருக்கு. இலட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க.

ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்!

ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படணும்.

மீண்டும் நீட் தேர்வு நடத்துனா ஏற்படும் Delay, மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால, பழையபடி Plus Two தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே MBBS இடங்கள் ஒதுக்கப்படணும்.

தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே தி.மு.க இந்த தீர்வை கடுமையாக எதிர்த்து சட்டப்போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories