தமிழ்நாடு

பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!

சென்னை காசிமேடு பகுதியில் 10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட TVK நிர்வாகியை போக்ஸோ வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட காசிமேடு சிங்காரவேலன் நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த மாதம் வந்துள்ளார். இந்த சூழலில் தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற தினமான ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி அன்று வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்கிற பாம்பு தினேஷ் என்பவர் தனது வீட்டிற்கு சிறுமி அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் தனது அறைக்கு சிறுமியை அழைத்துச் சென்ற பாம்பு தினேஷ், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும் தான் அத்துமீறலில் ஈடுபட்டதை வெளியில் சொன்னால் கழுத்தை நெரித்து கொன்று விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்.

இதனால் பயந்துபோன சிறுமி வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார். இதனை கண்ட உறவினர்கள், சிறுமியிடம் விசாரிக்கும்போது, தனக்கு நேர்ந்த கொடுமைகளை மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற சிறுமி சித்தியிடம் கூறியுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் சித்தி, உடனடியாக சிறுமியின் பெற்றோருக்கு இந்த தகவலை கூற, கடந்த மூன்றாம் தேதி இதுகுறித்த புகாரை சிறுமியின் பெற்றோர் காசிமேடு காவல் நிலையத்தில் அளித்துள்ளனர்.

போக்சோ வழக்கு என்பதால் காசிமேடு போலீசார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பரிந்துரைத்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நான்காம் தேதியே தினேஷை கைது செய்ய முயன்றுள்ளனர்.

ஆனால் தினேஷ் ஆர்.கே.நகர் தொகுதியில் விஜய் கட்சியான தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட மரிய வில்சனுக்கு ஆதரவாக வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்றிருந்ததால் கைது செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு (மே 5) தினேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட தினேஷ் ஆர் கே நகர் 43 வது வார்டு தமிழக வெற்றிக் கழக வட்டச் வட்டச் செயலாளர் என்பதும் ஆர்கேநகர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள மரிய வில்சனின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என பொதுமக்களிடம் பொய்யாக கூறி வெற்றி பெற்ற நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சியில், வட்டச் செயலாளரே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியும் அச்சமும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories