அரசியல்

“இவரது தீர்ப்பால்தான் மணிப்பூர் கலவரமே வெடித்தது.. அப்படிப்பட்டவரை நியமிப்பதா?”- தவெக-வுக்கு CPI கண்டனம்!

தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

“இவரது தீர்ப்பால்தான் மணிப்பூர் கலவரமே வெடித்தது.. அப்படிப்பட்டவரை நியமிப்பதா?”- தவெக-வுக்கு CPI கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-

தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் அமைந்த உயர்மட்ட குழு, அவரது பெயரை பரிந்துரைத்ததாக தகவல்கள் இருக்கின்றன.

நீதிபதி எம்.பி .முரளிதரன், முன்பு மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்த போது, "மெய்தி இன மக்கள், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் " என்று தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பின் விளைவாக மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு, மூன்றாண்டுகள் கடந்தும் கூட, இன்னும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.

“இவரது தீர்ப்பால்தான் மணிப்பூர் கலவரமே வெடித்தது.. அப்படிப்பட்டவரை நியமிப்பதா?”- தவெக-வுக்கு CPI கண்டனம்!

நீதிபதி எம்.வி.முரளிதரன் அளித்த தீர்ப்பு “முற்றிலும் தவறானது, உண்மைகளுக்கு முரணானது, வெறுக்கத்தக்கது” என்று உச்ச நீதிமன்றம் கடுமையான சொற்களில் கருத்துக்களைத் தெரிவித்தது. மேலும் "தன்னைத் திருத்திக் கொள்வதற்கு நீதிபதி முரளீதரனுக்கு அவகாசம் அளித்தோம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை" என்று அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் கூறியிருக்கிறார்.

பழங்குடியினர் வரலாறு, சமூக உறவுகள் தொடர்பாக போதுமான புரிதலும், ஞானமும் இல்லாத ஒருவரை, அதே துறையின் நீதிமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்ட மாநில ஆணையத்துக்கு தலைவராக நியமித்திருப்பது பொருத்தமற்றது. பேராபத்தானது.

கால நீடிப்பில் செயல்படும் தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவின் பரிந்துரை, செயலாக்கப்பட்டிருப்பது, ஏராளமான வினாக்களை எழுப்புகிறது. எனவே, எம்.வி.முரளீதரன் நியமனத்தை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்து, உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

நாக்பூர் குரு பீடப் பின்னணி இல்லாத, மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நீதிபதி ஒருவரை பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவர் பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

banner

Related Stories

Related Stories