அரசியல்

“மாணவர்களை கல்வி உதவிக்காக இப்படி கெஞ்சவிடுவது நியாயமா?” : த.வெ.க அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி கண்டனம்!

சமூகநீதித் துறை என்று பெயர் மாற்றிவிட்டு, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கனவை அலட்சியமாக நிறுத்தி வைக்கும் இந்த ஆட்சியின் மெத்தனம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

“மாணவர்களை கல்வி உதவிக்காக இப்படி கெஞ்சவிடுவது நியாயமா?” : த.வெ.க அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டில் பல்வேறு சமூகநீதித் திட்டங்களை செயல்படுத்தி வந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயரை ஆட்சிக்கு வந்ததும், ‘சமூக நீதித்துறை’ எனப் பெயர் மாற்றம் செய்த த.வெ.க அரசு, சமூக நீதியை உறுதிசெய்வதில் காழ்ப்புணர்வுடன் இயங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது மாணவர்களின் உயர்கல்வி உதவித்தொகையை விடுவிக்காமல் தாமதித்து, கல்விக் கனவை கேள்விக்குறியாக்கியுள்ளது த.வெ.க அரசு.

இதனைக் கண்டித்து தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பின்வருமாறு,

“முதலமைச்சர் பொறுப்பில் அமர்ந்திருக்கும் விஜய் அவர்களே... எங்கள் மானமிகு மாணவர்களை கல்வி உதவிக்காக இப்படி கெஞ்சவிடுவது நியாயமா?

“மாணவர்களை கல்வி உதவிக்காக இப்படி கெஞ்சவிடுவது நியாயமா?” : த.வெ.க அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி கண்டனம்!

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 365 மாணவர்களில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்த 164 பேரில் வெறும் 65 பேருக்கு மட்டுமே இதுவரை நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள் சமர்ப்பித்த பின்னரும் மாதக்கணக்காக காத்திருக்கும் மாணவர்கள் வாடகை, கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கிறார்கள். மாணவர்களின் குடும்பங்கள் நகையை அடகு வைத்து, வட்டிக்கு கடன் வாங்கி பிள்ளைகளைக் காப்பாற்ற போராடுகின்றன.

சமூகநீதித் துறை என்று பெயர் மாற்றிவிட்டு, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கனவை அலட்சியமாக நிறுத்தி வைக்கும் இந்த ஆட்சியின் மெத்தனம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

மாணவர்களின் உரிமைகளைப் பறிக்காமல், உடனடியாக அரசின் நிதியினை விடுவிக்க வேண்டும், அவர்கள் கேட்பது அரசின் நிதியை மட்டுமே! அதை, இன்றே உறுதி செய்ய வேண்டும்.”

banner

Related Stories

Related Stories