தமிழ்நாடு

பெரிய பட்ஜெட் திரைப்படங்களை Revenue Share-முறையில் மட்டுமே தயாரிக்க முடிவு! : முழு விவரம் உள்ளே!

தமிழ்த் திரையுலகில் இனிவரும் காலங்களில் மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் Revenue Share-முறையில் மட்டுமே தயாரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பெரிய பட்ஜெட் திரைப்படங்களை Revenue Share-முறையில் மட்டுமே தயாரிக்க முடிவு! : முழு விவரம் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ் திரைப்படத் துறை மூலம் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகி, உலகம் முழுவதும் சிறப்பான வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் திரைத்துறையில் சில மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அண்மையில் தயாரிப்பாளர் சங்கத் தலைமைப் பொறுப்பிற்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில், ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் வென்றார்.

அதனைத் தொடர்ந்து, இன்று (ஏப்.26) கூடிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு,

நமது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2026-2029ம் ஆண்டிற்கான தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்ததற்காக ஒய்வு பெற்ற நீதியரசர் ராஜேஸ்வரன் அவர்களுக்கும், அவரது உதவியாளர்களுக்கும், சிறப்பான முறையில் அமைதியாக தேர்தலை நடத்திட ஒத்துழைப்பு தந்த காவல்துறையினருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் மற்றும் கந்தசாமி நாயுடு கல்லூரி நிர்வாகத்தினருக்கும், கல்லூரி உதவியாளர்களுக்கும் இந்த பொதுக்குழுவில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தமிழ்த் திரைப்பட மறுசீரமைப்பு குறித்து தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத்தொகுப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம், ஆகிய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் புதிய ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது

தமிழ் சினமாவில் தற்போது OTT மற்றும் சாட்டிலைட் வியாபாரம் சரிந்து வரும் இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆந்திரா மாநிலத்தில் உள்ளது போல நடிகர்கள் மற்றும் முன்னனி தொழில்நுட்ப கலைஞர்கள் Revenue Share முறையில் தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து படம் நடிக்க வேண்டும்.

தயாரிப்பாளர்களின் லாப நஷ்டங்களில் பங்கு கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே நடைபெற்ற பொதுக்குழுவில் முடிவெடுத்து நடிகர் சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளார்கள். மேலும், நடிகர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திடவும் வரவில்லை. ஆந்திராவில் உள்ள தயாரிப்பாளர்கள் அங்குள்ள நடிகர்களால் பாதுகாக்கப்படுகிறார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் தற்போது விரல்விட்டு எண்ணக்கூடிய தயாரிப்பாளர்கள் திரைப்படங்கள் எடுக்க தயங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் Revenue Share-முறையில் மட்டுமே தயாரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விஷயத்தினை சினிமாத்துறையில் உள்ள அனைவரின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யவும், சங்கம் நடிகர் தொடர்ந்து இதே இனி போக்கை கடைபிடிக்குமானால் தொடர் வேலை நிறுத்தம் செய்யவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

பெரிய பட்ஜெட் திரைப்படங்களை Revenue Share-முறையில் மட்டுமே தயாரிக்க முடிவு! : முழு விவரம் உள்ளே!

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து, தமிழ்த் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட வேண்டுமென்றால், அந்தந்த திரைப்படங்களை 8-வாரங்களுக்கு OTT-வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளர்களை நிர்பந்தம் செய்து கடிதம் வாங்கி வருவதை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

மேற்படி விஷயம் குறித்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒன்றினைந்து வருகிற 10.05.2026 அன்று கலந்தாய்வு கூட்டம் நடத்தவுள்ளார்கள். அக்கூட்டத்தில் நான்கு மாநில தயாரிப்பாளர்களும் சேர்ந்து, குறிப்பிட்ட தேதியை தீர்மானித்து, அந்த தேதியிலிருந்து, நான்கு மாநிலங்களிலும் எந்த திரைப்படங்களையும் வெளியிடுவதில்லை என்ற முடிவினை எடுக்கவுள்ளார்கள். அந்த முடிவுக்கு பொதுக்குழு ஆதரவு தெரிவித்து ஏகமனதாக ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள், சங்கத்திற்கு தெரியாமல் OTT சம்பந்தமாக கடிதம் அளித்தார்கள் என்றால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு தமிழ்த் திரையுலகம் தொழில் ஒத்துழைப்பு வழங்காது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது

சார்பில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தமிழ்சினமா செய்திமலர் என்ற புத்தகம் வரும் மாதத்திலிருந்து மூலம் நடத்தப்படும் சங்கத்தின் அன்றாட நமது சங்கம் நடவடிக்கைகள் அனைத்து உறுப்பினர்களுக்கும் மாதாமாதம் தெரிவிக்கப்படும் அதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதே போல சங்கத்தின் சார்பில் Youtube channel ஆரம்பிக்கப்படும் அதன் மூலம் தயாரிப்பாளர்கள் தங்களது சினிமா விளம்பரங்கள் செய்யலாம் அதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

banner

Related Stories

Related Stories