தமிழ்நாடு

த.வெ.க எம்.எல்.ஏ. சரவணன் மீது பணமோசடி புகார் : “இதுதான் தூய ஆட்சியின் லட்சணமா?” - கனிமொழி எம்.பி. சாடல்!

மக்களின் பிரதிநிதியாக நீடிக்கத் தகுதியற்ற சரவணன் மீதான குற்றச்சாட்டுகள் மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

த.வெ.க எம்.எல்.ஏ. சரவணன் மீது பணமோசடி புகார் : “இதுதான் தூய ஆட்சியின் லட்சணமா?” - கனிமொழி எம்.பி. சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டிற்கு தூய ஆட்சியை கொடுப்போம் என ஆட்சிக்கு வந்த தவெக அரசு, தொடர்ச்சியாக டெண்டர் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில், அரசு வேலை மற்றும் வாரிய உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக தவெகவினர் பண வேட்டையில் ஈடுபட்டு வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், தற்போது இளைஞர் ஒருவர் வீடியோ ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் த.வெ.க. எம்.எல்.ஏ. சரவணன் மீது பணமோசடி புகாரைக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியைச் சேர்ந்தவர் வைணவப்பெருமாள். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது நெருங்கிய நண்பராக இருந்ததாகவும், அவரது தேர்தல் வெற்றிக்காகத் தீவிரமாகப் பணியாற்றியதாகவும் கூறினார்.

த.வெ.க எம்.எல்.ஏ. சரவணன் மீது பணமோசடி புகார் : “இதுதான் தூய ஆட்சியின் லட்சணமா?” - கனிமொழி எம்.பி. சாடல்!

மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நலவாரியத்தில் உறுப்பினர் பதவிக்காக முன்பணமாக ரூ.60 ஆயிரத்தை எம்.எல்.ஏ. சரவணன் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தற்போதுவரை உறுப்பினர் பதவியையோ, கொடுத்த பணத்தையையோ திருப்பித் தரவில்லை எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “திருவைகுண்டம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கு.சரவணன், ஆதிதிராவிடர் நலவாரிய உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி வைணவப்பெருமாள் என்பவரை ஏமாற்றி லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊழலற்ற ஆட்சி நடத்துகிறோம் என்பவர்களின் உண்மை முகம் இதுதான்!

ஆட்சிக்கு வந்த புதிதிலேயே, பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கிலும் இதே சட்டமன்ற உறுப்பினர் மீது பாதிக்கப்பட்ட பெண் குற்றஞ்சாட்டினார். அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் ஆய்வு என்ற பெயரில் மருத்துவரை அவமானப்படுத்தியவரும் இதே நபர்தான்.

எனது தூத்துக்குடி தொகுதி மக்களின் நலனுக்கு அச்சுறுத்தலாக இந்த நபர் இருக்கிறார் என்பது மேலும் கவலையளிக்கிறது. மக்களின் பிரதிநிதியாக நீடிக்கத் தகுதியற்ற சரவணன் மீதான குற்றச்சாட்டுகள் மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories