அரசியல்

“பாலுக்கு காவல், பூனைக்கு தோழனா?” : விஜய்யின் Double Action-க்கு தயாநிதி மாறன் கண்டனம்!

“இரண்டு பிரதமர் வேட்பாளர்களும் சென்னையில் சந்தித்துக் கொள்வார்களா?” என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி!

“பாலுக்கு காவல், பூனைக்கு தோழனா?” : விஜய்யின் Double Action-க்கு தயாநிதி மாறன் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டில் கவர்ச்சி மூலம் 108 இடங்களைப் பிடித்த த.வெ.க, நேரடியாக காங்கிரசுடனும், மறைமுகமாக பா.ஜ.க.வுடனும் கூட்டணி வைத்து ஆட்சியை தக்கவைத்து வருவது, ஒவ்வொரு நாளும் உறுதியாகி வருகிறது.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பா.ஜ.க.வின் காவல்துறையால் அடக்கி ஒடுக்கப்பட்டால்கூட, த.வெ.க.வினரின் கண்டனக் கருத்துகளில் பா.ஜ.க என்ற சொல் இடம்பெறுவதில்லை.

பா.ஜ.க.வினரே விஜய்யையும், அவரது கட்சியையும் விமர்சித்தால்கூட, அதனை தி.மு.க பக்கம் திருப்பி பொய் பரப்பல் செய்வதை த.வெ.க தொடர்வதும், அதனை காங்கிரஸ் கண்டிக்காமல் இருப்பதும், மேலும் மேலும் சர்ச்சைகளுக்கு வித்திட்டுதான் வருகிறது.

இப்படியான நிலையில் அக்.10 அன்று ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வருகை தருவதையொட்டி, த.வெ.க - காங்கிரஸ் குழப்பக் கூட்டணியின் நகர்வு என்னவாக இருக்கும் என்பதான கேள்விகள் எழுந்து வருகின்றன.

“பாலுக்கு காவல், பூனைக்கு தோழனா?” : விஜய்யின் Double Action-க்கு தயாநிதி மாறன் கண்டனம்!

இது குறித்து, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பின்வருமாறு,

“அக்டோபர் 10 அன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை வருகையாம். எல்லாருக்கும் ஏற்படும் சந்தேகம்தான் எனக்கும்.

“இரண்டு பிரதமர் வேட்பாளர்களும் சென்னையில் சந்தித்துக் கொள்வார்களா?”

அதுவும், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைதுக்கு, த.வெ.க. தலைவரும் வாயைத் திறக்கவில்லை, பொத்தாம்பொதுவாக, பா.ஜ.க. என்ற சொல்லே இல்லாமல், வருடிக் கொடுக்கும் வார்த்தைகளால் த.வெ.க. வெளியிட்ட அநாமதேய ஆட்சேபனை ட்வீட்டைப் பார்த்தபின் இந்தச் சந்தேகம் மேலும் வலுக்கிறது.

தனது நாற்காலியைக் காப்பாற்றிக்கொள்ள, காங்கிரசுக்கு இரண்டு அமைச்சர் பதவிகளைத் தந்துவிட்டு, பா.ஜ.க. கோபித்துக்கொள்ளும் என்பதற்காக இந்தியா கூட்டணியில் இருந்து ஒதுங்கி இருக்கும் விஜய்யின் Double Action-ஐ மக்கள் கவனிக்காமல் இல்லை.

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழனாக எத்தனை நாள் இவர்களின் பொருந்தாக் கூட்டணி நீடிக்கிறது என்று பார்ப்போம். கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருக்கு வந்துதானே ஆக வேண்டும்!”

banner

Related Stories

Related Stories