சினிமா

தேசிய விருதுகள் முதல் பத்ம ஸ்ரீ விருதுகள் வரை.. காலா பட நடிகர் நானா படேகர் காலமானார்!

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

தேசிய விருதுகள் முதல் பத்ம ஸ்ரீ விருதுகள் வரை.. காலா பட நடிகர் நானா படேகர் காலமானார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் தான் நானா படேகர் (Nana Patekar). மராத்தி, இந்தி மொழி படங்களில் நடித்து வந்த இவர், 2018-ல் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'காலா' படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். முன்னதாக பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

மராத்தி, இந்தி படங்களில் நடித்த இவர், பத்ம ஸ்ரீ விருது, 3 தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவர் திரைப்படம் மட்டுமல்லாது, அரசியல் சார்ந்த கருத்துகளையும் அவ்வப்போது முன் வைத்து வருகிறார். கடந்த 2024-ம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கூட, விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

தேசிய விருதுகள் முதல் பத்ம ஸ்ரீ விருதுகள் வரை.. காலா பட நடிகர் நானா படேகர் காலமானார்!

இந்த நிலையில் இன்று (அக். 8) கோவாவில் உள்ள அவரது இல்லத்தில், சுய நினைவை இழந்து மயங்கிய நிலையில் நடிகர் நானா படேகர் கண்டெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே, அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நானா படேகரின் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது 75 -வது வயதில் நானா படேகர் காலமான நிலையில், அவரது உயிரிழப்பு ரசிகர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories