தமிழ்நாடு

குடிநீர் தொட்டியில் மலம்.. மூடி மறைத்த அரசுப் பள்ளி நிர்வாகம்.. 2 நாட்களாக அவலம்!

அரசு தொடக்கப் பள்ளி குடிநீா்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக எழுந்த புகார் திண்டுக்கல்லில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடிநீர் தொட்டியில் மலம்.. மூடி மறைத்த அரசுப் பள்ளி நிர்வாகம்.. 2 நாட்களாக அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்திற்கு உட்பட்ட மானூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயற்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த சூழலில் இங்கு படிக்கும் மாணவர்களின் குடிநீர் தேவைக்காக பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பள்ளி காலாண்டு விடுமுறை முடிந்து, கடந்த அக்.05-ம் தேதி பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது அங்கே தூய்மை பணியில் ஈடுபட்டவர், தண்ணீரில் ஏதோ கலந்திருப்பதை கண்டறிந்தார். இதைத்தொடர்ந்து சோதித்தபோது குடிநீரில் மனித மலம் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தை தொடர்ந்து அந்த தொட்டி சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

குடிநீர் தொட்டியில் மலம்.. மூடி மறைத்த அரசுப் பள்ளி நிர்வாகம்.. 2 நாட்களாக அவலம்!

எனினும் இந்த விவகாரத்தை பள்ளி தலைமையாசிரியர் மறைக்க முயன்றபோது, இது மாணவர்களின் பெற்றோருக்கு தெரியவர, உடனே பள்ளிக்கு வந்து தலைமையாசிரியர் ஜெயக்குமாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு இது தொடர்பாக கீரனூர் போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்து உண்மை என்றும், அந்த நீரை பயன்படுத்தும் முன் சுத்தம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. மேலும் இதனை பள்ளி நிர்வாகமே மறைத்ததும் அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடிநீர் தொட்டியில் மலம்.. மூடி மறைத்த அரசுப் பள்ளி நிர்வாகம்.. 2 நாட்களாக அவலம்!

அதோடு மாணவ, மாணவியர்கள் நாள்தோறும் அருந்தும் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டவுடன், அது குறித்து புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பள்ளி நிர்வாகமே, அவ்விவகாரத்தை 2 நாட்களாக மூடி மறைக்க முயன்றிருப்பதன் பின்னணியில் ஏதேனும் சதி இருக்கிறதா? அல்லது குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக இவ்விவகாரம் மூடி மறைக்கப்பட்டதா? என்ற சந்தேகம் பெற்றோர்கள் மற்றும் ஊர்மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்காமல், பணிகளில் சுணக்கம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதோடு இதுகுறித்து அமைச்சர்கள் இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பதும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories