தமிழ்நாடு

“சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வாஷ்அவுட் ஆகும்” - எல்.கே. சுதீஷ் எம்.பி பேட்டி!

தி.மு.க கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

“சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வாஷ்அவுட் ஆகும்” - எல்.கே. சுதீஷ் எம்.பி பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. விருப்பமனுக்கள், நேர்காணல்கள், தொகுதிப் பங்கீடு என அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தத் தேர்தல் களத்தில் தி.மு.க கூட்டணிதான் அதிவேகமாகச் செயல்பட்டு வருகிறது. கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை அடுத்தடுத்து முடித்து வரும் நிலையில், தி.மு.க சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களுடனான நேர்காணல், கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் காலை முதல் இரவு வரை நடைபெற்று வருகிறது.

மறுபுறம், அ.தி.மு.க கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்படவில்லை. அக்கூட்டணியில் பா.ஜ.க-வே அனைத்தையும் முடிவு செய்து வருவதாகத் தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி அவர்கள் வழக்கம்போல் டெல்லித் தலைமையின் கட்டளைகளுக்கு இணங்கிச் செயல்பட்டு வருகிறார்.

இந்தத் தேர்தலில் கூட்டணிகளில் அதிரடித் திருப்பங்களும் நிகழ்ந்துள்ளன. கடந்த தேர்தல்களில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்த தே.மு.தி.க, தற்போது தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ளது. தே.மு.தி.க-வுக்கு ஒரு மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டு, எல்.கே. சுதீஷ் அவர்கள் எம்.பி-யாகப் பதவியும் ஏற்றுள்ளார்.

கடந்த காலங்களில் மாநிலங்களவை இடத்தைக் கொடுப்பதாகக் கூறி தே.மு.தி.க-வை அ.தி.மு.க ஏமாற்றிய நிலையில், தே.மு.தி.க-வின் நீண்ட காலக் கனவை தி.மு.க தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தே.மு.தி.க பொருளாளர் எல்.கே. சுதீஷ் எம்.பி, "இந்தச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்; அ.தி.மு.க வாஷ்அவுட் ஆகும்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories