தமிழ்நாடு

10 மாவட்டங்களில்.. 10 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள்! : முதல்வர் திறந்து வைத்தார்!

ரூ.16.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

10 மாவட்டங்களில்.. 10 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள்! : முதல்வர் திறந்து வைத்தார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று  (4.3.2026)  தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 7 கோடியே 65 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள  2 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள், 4 கோடியே 53 இலட்சத்து 96 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 1 வட்டாட்சியர் அலுவலக கட்டடம், 40 இலட்சத்து 73 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 1 வட்டாட்சியர் குடியிருப்பு கட்டடம் மற்றும் 3 கோடியே 60 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 10 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையானது மாவட்ட நிருவாகம், நில நிருவாகம் மற்றும் அரசு நிலங்களை நிருவகித்தல், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்துதல், பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்தல், நில அளவை மற்றும் நிலவரித்திட்டத்தை மேற்கொள்ளுதல், நிலச் சீர்திருத்த திட்டங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.

இயற்கை சீற்றங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது. இத்துறையின் பணிகளை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

இப்பணியினை மேலும் வலுப்படுத்தும் விதமாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் கோட்டம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை கோட்டம் ஆகிய கோட்ட அலுவலகங்கள் 7 கோடியே 65 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்;

10 மாவட்டங்களில்.. 10 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள்! : முதல்வர் திறந்து வைத்தார்!

சேலம் மாவட்டம், தலைவாசலில் 4 கோடியே 94 இலட்சத்து 69 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்புக் கட்டடம்;

திண்டுக்கல் மாவட்டம் – செந்துறை, தூத்துக்குடி மாவட்டம் – கடலையூர், செங்கல்பட்டு மாவட்டம் – மதுராந்தகம், காஞ்சிபுரம் மாவட்டம் – வல்லம்-அ, திருப்பூர் மாவட்டம் – பொன்னாபுரம், திருவள்ளூர் மாவட்டம் – மீஞ்சூர், இராணிப்பேட்டை மாவட்டம் - நெமிலி, திருப்பத்தூர் மாவட்டம் – கந்திலி, கோயம்புத்தூர் மாவட்டம் – வால்பாறை மற்றும் விருதுநகர் மாவட்டம் – திருத்தங்கல் ஆகிய இடங்களில் 3 கோடியே 60 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள  10 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புக் கட்டடங்கள்;

என மொத்தம் 16 கோடியே 19 இலட்சத்து 69 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள், 1 வட்டாட்சியர் அலுவலகம், 1 வட்டாட்சியர் குடியிருப்பு கட்டடம் மற்றும் 10 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

இவ்வரசு பொறுப்பேற்ற ஐந்தாண்டுகளில், 141 வருவாய்த் துறை அலுவலகக் கட்டடங்கள் கட்டுவதற்கு 296 கோடியே 89 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிருவாகம் மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டு, தற்போது வரை 98 கட்டடங்கள் 212 கோடியே 99 இலட்சம் ரூபாய் செலவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டடம்;

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டடம், 2 கோட்டாட்சியர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு  கட்டடங்கள், 2 கோட்டாட்சியர் அலுவலக கட்டடங்கள், 13 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள், 8 வட்டாட்சியர் குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் 70 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. 

banner

Related Stories

Related Stories