
சிறு மற்றும் குறு தொழில்களுக்கான அதிகரித்து வரும் செயல்பாட்டு ஒழுங்குமுறைகள், நிதியை பெறுவதில் உள்ள கட்டுபாடுகள், கட்டமைப்புகளில் உள்ள தவறுகளால் ஏற்படும் மோசமான பின்விளைவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளினால் ஏற்படும் அழுத்தங்களை நிறுவனங்கள் எதிர்கொள்வது குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சவால்களின் தாக்கத்தை ஆய்வு செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எளிதாக கடன் பெறவும் அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் என்ன? என்றும் வில்சன் எம்.பி கேட்டுள்ளார்.
பெரம்பலூர் கைத்தறி உற்பத்திக்கான நிலுவலையிலுள்ள திட்டங்களின் நிலை என்ன?
தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் (NHDP) கீழ் உருவாக்கப்பட்ட கைத்தறி நெசவாளர் தொகுப்புகளின் எண்ணிக்கை மற்றும் HMF, கிளஸ்டர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்பட்ட விவரங்கள், பயனாளிகளின் எண்ணிக்கை, நவீனமயமாக்கப்பட்ட தறிகள் மற்றும் கட்டப்பட்ட உற்பத்தி கொட்டகைகள் குறித்த விவரங்கள் கேட்டு திமுக மக்களவை உறுப்பினர் அருண் நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரம்பலூர் கைத்தறி தயாரிப்புகளுக்கான நிலுவையில் உள்ள GI டேக் விண்ணப்பங்களின் நிலை என்ன? 2023-26 ஆம் ஆண்டில் பெரம்பலூர் கைத்தறித் தொகுப்புகளுக்கு நடத்தப்பட்ட திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், நெசவாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட TUFS கடன்கள், சந்தை மேம்பாடு ஒழுங்குபடுத்தப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.






