தமிழ்நாடு

நேர்மையுடன் செயல்பட்ட தூய்மைப் பணியாளர் : நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நேர்மையுடன் செயல்பட்ட தூய்மைப் பணியாளருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்.

நேர்மையுடன் செயல்பட்ட தூய்மைப் பணியாளர் : நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் பத்மா, நேற்று சென்னை தியாகராய நகர், வண்டிக்காரன் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது 45 சவரன் தங்க நகைகளை கண்டெடுத்த அவர், உடனடியாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பிறருக்கு முன்மாதிரியாக திகழும் தூய்மைப் பணியாளர் பத்மாவை, தலைமைச் செயலகத்திற்கு அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். பத்மாவிற்கு சால்வை அணிவித்து சிறப்பித்த முதலமைச்சர், ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கி அவரின் நேர்மையை பாராட்டினார்.

இந்நிகழ்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் ஜெயசீலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories