தமிழ்நாடு

“Very sorry உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

மத உணர்வுகளைத் தூண்டிக் குளிர்காய யார் - எவ்வளவு முயன்றாலும், திரும்பவும் திராவிட மாடல் அரசுதான்!

“Very sorry உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் மதமோதல்களை ஏற்படுத்தும் வகையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளித்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இந்த தீர்ப்பை பயன்படுத்தி இந்துத்துவ மற்றும் பா.ஜ.கவினர் திருப்பரங்குன்றத்தில் வன்முறையை ஏற்படுத்த முயற்சித்தனர். தற்போது இவர்களுக்கு உதவும் வகையிலேயே, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான தீர்ப்பு என பலரும் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில், மத உணர்வுகளைத் தூண்டிக் குளிர்காய யார் - எவ்வளவு முயன்றாலும், திரும்பவும் திராவிட மாடல் அரசுதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”நான்கரை ஆண்டுகளில் 4,000 கோயில் குடமுழுக்குகளை நடத்தி பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றுள்ள நம் Dravidian Model அரசை அவதூறுகளால் வீழ்த்தி விடலாம் என்று நினைத்தால்... Very sorry, உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது!

தமிழ்நாட்டின் reality-யும் புரியாமல், வகிக்கும் பொறுப்பின் dignity-யும் உணராமல் பொய்க் குற்றச்சாட்டுகளை வாசிப்பவர்களுக்கு, "பக்தர்கள் போற்றும் ஆட்சி இது" என மக்கள் தீர்ப்பில் தெரியவரும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories