
ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ச்சியாக விவசாயிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறது. தற்போது 20 ஆண்டுகளுக்கு மேலாக கிராம பொருளாதாரத்தை உயர்த்தி வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, அதில் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
அதிலும் குறிப்பாக, மகாத்மாக காந்தியின் பெயரையும் ஒன்றிய அரசு நீக்கி இந்த திட்டத்திற்கு VBGRAMG என பெயர் மாற்றம் செய்துள்ளது. அதோடு 100% நிதியை ஒன்றிய அரசு வழங்கி வந்த நிலையில் தற்போது மாநில அரசு 40%-ம் என்றும் ஒன்றிய அரசு 60% என்று நிதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்த ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்தும், இதற்கு ஒத்து ஊதும் அ.தி.மு.கவை கண்டித்தும் இன்று தமிழ்நாடு முழுவதும் ‘மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் VBGRAMG சட்டம் ஒழிக, மோடி அரசு ஒழிக என வின் அதிர முழக்கங்கள் எழுந்தது. இந்தியாவிலேயே VBGRAMG சட்டத்திற்கு எதிராக எழுந்துள்ள முதல் குரல் தமிழ்நாடுதான்.
எப்போது மக்களுக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்பட்டாலும் தமிழ்நாடும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரலும் தான் முதல் குரலாக எழுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






