தமிழ்நாடு

டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உங்களது வெற்றி தான் எங்களது மகிழ்ச்சி விளையாட்டு வீரர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

VIBE WITH MKS நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது விளையாட் வீரர்கள் முதலமைச்சரிடம் அவருக்கு பிடித்த விளையாட்டு, இளமை காலம், விளையாட்டு துறையின் மீது ஆர்வம் உள்ளிட்ட பல்வேறு கேள்விளை எழுப்பினர்.

இவர்களது கேள்விகளுக்கு எல்லாம் புன்னகையுடன் முதலமைச்சர் பதிலளித்தார். அவரது பதில்களை நாம் இங்கு பார்ப்போம்.

”கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவிற்கு முதல் உலக கோப்பை வாங்கிக் கொடுத்த கபில்தேவ், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி ஆகியோரை பிடிக்கும். தற்போது சிறப்பாக விளையாடும் தமிழ்நாட்டு வீரர்களையும் ரொம்ப பிடிக்கும்.

நான் பள்ளி படிக்கும் போது ஹாக்கி அணியில் இருந்தேன். MCC பள்ளியில் படிக்கும் போது ST.பீட்டர்ஸ் பள்ளிக்கு எதிரான போட்டியில் நான் விளையாடி இருக்கிறேன். எனக்கு ஹாக்கியும் பிடிக்கும், கிரிக்கெட்டும் பிடிக்கும்.

இப்போது இருக்கும் இளைஞர்களை போல் நானும் வீதிகளில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். எனது தந்தை (கலைஞர்) எங்களுடன் விளையாடுவார். எனக்கு பந்துவீச பிடிக்கும். பள்ளிகளில் புத்தக கிரிக்கெட் விளையாடிய அனுபவமும் எனக்கு உண்டு.

எனக்கு எம்.எஸ்.தோனியின் Captainship பிடிக்கும். சிரிப்போடும், அமைதியோடும், எந்தவித பதட்டமும் இல்லாமல் அவர் செய்யும் Captainship எனக்கு மிகவும் பிடிக்கும். அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கிறார் எம்.எஸ்.தோனி.

கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. சேப்பாக்கத்தில் ஒரு முறை சினிமா நடிகர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் நானும் பங்கேற்றேன். என் அணி சார்பில் சுழற்பந்து வீசி சிலம்பரசன், நெப்போலியன் உள்ளிட்ட மூன்று பேரின் விக்கெட்டுகளை எடுத்தேன்.

நான் 14 வயதிலேயே அரசியலுக்கு வந்துவிட்டேன். அப்போதில் இருந்தே டென்ஷன்தான். அப்படி இருக்கும் போது புத்தகங்கள் படிப்பேன். பாட்டு கேட்பேன். அப்படியும் இல்லை என்றால் நடைபயிற்சிக்கு செல்வேன்.

சர்வதேச போட்டிகளில் தமிழ்நாட்டு வீரர்கள் வெற்றி பெறுவதை பார்க்கும் போது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதனால்தான் உங்களுக்கு உடனே ஊக்கத்தொகை தொடுத்து கவுரவிக்கிறோம். தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை உலகளவில் சிறந்து விளங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

மேலும், ”Champion-ஓட True Strength பதக்கங்கள்ல மட்டும் இல்ல, அவங்ககிட்ட இருக்குற Discipline, Pressure-ஐ handle பண்ணுற விதம், விடாமுயற்சி இது எல்லாத்துலயும்தான் இருக்கு! தமிழ்நாடு முழுக்க இருந்து வந்திருந்த நம்ம Young Athletes-கூட பேசினப்போ, அவங்களோட Clarity-ஐயும் Confidence-ஐயும் பார்த்து மிரண்டு போயிட்டேன். Next Level Focus! இவங்க வெறும் விளையாட்டை மட்டும் விளையாடல, நம்ம தமிழ்நாட்டோட Future Legacy-யை உருவாக்கிட்டு இருக்காங்க. இதனால்தான் நம்ம இளைஞர்கள் மேல எனக்கு எப்பவும் ஒரு தனி நம்பிக்கை உண்டு” என பதிவிட்டு சமூகவலைதளத்தில் வீடியோவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories