தமிழ்நாடு

2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்க திட்டம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ள நிலையில், விடுபட்ட மகளிருக்கு ரூ.1000 இன்றே வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 மாதந்தோறும் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று 2021-ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2023 செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த திட்டத்திற்கு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்று பெயர் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன்படி முதற்கட்டமாக இந்த திட்டத்தில் சுமார் 1,13,75,492 மகளிர் தற்போது வரை பயனடைந்து வருகின்றனர். தகுதியுடைய மகளிர்க்கு மாதந்தோறும் 15-ம் தேதியன்று அவரவர் வங்கி கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.

2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!

இந்த சூழலில் தொடர்ந்து கூடுதல் மகளிர் பயனடையும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. மேலும் அண்மையில் அனைத்து பகுதிகளிலும் தொடங்கப்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமிலும் இதற்கான விண்ணப்பப்படிவம் வழங்கப்பட்டது.

இப்படியாக விடுபட்ட மகளிரும் பயனடைய வேண்டும் என்று அரசு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த நிலையில், இன்று முதல் விடுபட்ட மகளிரும் இதில் பயனடைகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கத்தை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.

2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!

அந்த வகையில் விடுபட்ட மகளிருக்கு அவரவர் வங்கி கணக்குகளில் ரூ.1000 செலுத்தும் பணி தொடங்கியுள்ள நிலையில், தற்போதே அனைவரின் வாங்கிக்கணக்கிலும் ரூ.1,000 செலுத்தப்பட்டு வருகிறது.

இன்று (டிச.12) மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார். அதோடு தமிழ்நாடு அரசின் திட்டங்களின் மூலம் பயனடைந்த பெண்களின் சாதனைகளை வெளிப்படுத்தும் விதமாக 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

banner

Related Stories

Related Stories