
காவிரி பிரச்சினையில் தனியாகச் சென்று கர்நாடக அரசிடம் பேசுவதாகவும், ஹீரோவைப் பார்த்த மயக்கத்தில் அவர்கள் தண்ணீரைத் திறந்து விடுவதாகவும், அதனைப் பெரிய சாதனையாகத் தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடுவதாகவும் முதலமைச்சர் விஜய் கனவு கண்டார்.
அது நடக்கவில்லை என்றதும், ‘தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்குவேன்’ என்று சோக நடிப்பையும் காட்டுகிறார். எவ்வளவு கோக்குமாக்கு?
‘காவிரியில் நீர் உரிமையை நிலைநாட்டுவதற்காக முதலமைச்சர் விஜய், கர்நாடகம் செல்லப் போகிறார்’ என்று முதலில் சொன்னது வேளாண் துறை அமைச்சர் தான். ‘இதனால் எந்தப் பயனும் இல்லை. சும்மா கணக்குக் காட்டத்தான் பயன்படும்' என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள். உழவர் அமைப்புகளும் இதே கருத்தைச் சொன்னார்கள். அதை மீறி கர்நாடகம் செல்வதில் உறுதியாக இருந்தார் விஜய்.
எதிர்ப்புகள் பலமாக, தொடர்ச்சியாக எழத் தொடங்கியதும். போகிறோமா, இல்லையா என்பதையே சொல்லாமல் மவுனம் சாதித்தார் முதலமைச்சர் விஜய்.
'முதலமைச்சர் விஜய் கர்நாடகம் செல்லும் திட்டம் இல்லை' என்று இன்னொரு அமைச்சரை வைத்துச் சொல்ல வைத்தார்கள். ஆனால் இதில் முழு உண்மையை கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரே உடைத்து விட்டார்.
“கர்நாடகா வரும் முதலமைச்சர் விஜய்யை மிகுந்த மரியாதையுடன் வரவேற்கக் காத்திருக்கிறேன். அவரிடம் கர்நாடகாவின் தற்போதைய நிலை குறித்து விளக்குவேன். காவிரி விவகாரம் குறித்து தொலைபேசியில் முதலமைச்சர் விஜய் என்னிடம் பேசினார்.
கர்நாடகாவின் நீர்நிலைகளைப் பார்வையிடவும் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மேகதாது உள்ளிட்ட கர்நாடகாவின் நீர்நிலைகளை முதலமைச்சர் விஜய் பார்வையிடுவதற்காக ஹெலிகாப்டர் தயார் நிலையில் இருக்கிறது” என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரே சொன்னார்.

கர்நாடக முதலமைச்சரிடம். தான் பேசி இருக்கிறேன் என்பதையும் விஜய் வெளிப்படுத்தவில்லை. மாநிலத்தின் மிக முக்கியமான பிரச்சினை பற்றி, இன்னொரு மாநில முதலமைச்சருடன் பேசியதையே மறைத்தார் விஜய்.
'முதலமைச்சர் விஜய் கர்நாடகம் செல்லும் திட்டம் இல்லை' என்று இன்னொரு அமைச்சரை வைத்துச் சொல்ல வைத்தார்கள். ஆனால் இதில் முழு உண்மையை கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரே உடைத்து விட்டார்.
“கர்நாடகா வரும் முதலமைச்சர் விஜய்யை மிகுந்த மரியாதையுடன் வரவேற்கக் காத்திருக்கிறேன். அவரிடம் கர்நாடகாவின் தற்போதைய நிலை குறித்து விளக்குவேன். காவிரி விவகாரம் குறித்து தொலைபேசியில் முதலமைச்சர் விஜய் என்னிடம் பேசினார்.
கர்நாடகாவின் நீர்நிலைகளைப் பார்வையிடவும் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மேகதாது உள்ளிட்ட கர்நாடகாவின் நீர்நிலைகளை முதலமைச்சர் விஜய் பார்வை யிடுவதற்காக ஹெலிகாப்டர் தயார் நிலையில் இருக்கிறது" என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரே சொன்னார்.
கர்நாடக முதலமைச்சரிடம், தான் பேசி இருக்கிறேன் என்பதையும் விஜய் வெளிப்படுத்தவில்லை. மாநிலத்தின் மிக முக்கியமான பிரச்சினை பற்றி, இன்னொரு மாநில முதலமைச்சருடன் பேசியதையே மறைத்தார் விஜய்.
அடுத்ததாக, 'கர்நாடகா வந்து பேசுகிறேன் என்ற விருப்பமானது தமிழ்நாடு முதலமைச்சரிடம் இருந்துதான் வந்தது' என்பதையும் அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சொன்னார். அப்போதும் தமிழ்நாடு அரசு எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.

‘போகவேண்டாம்’ என்று தமிழ்நாட்டு மக்கள் சொன்னதைப் போலவே. 'வரக்கூடாது' என்று கர்நாடகாவிலும் பலரும் கொந்தளித்தார்கள். 'வர விடக் கூடாது' என்று தடை போட்டார்கள்.
* முதலில் விஜய்யை வரச் சொன்னார் கர்நாடக முதலமைச்சர். பின்னர் அவரே வர வேண்டாம் என்றார். இந்த அவமானம் தேவையா?
* கன்னட அமைப்புகள் மிகக்கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. இந்த அவமானம் தேவையா?
* முதலமைச்சர் விஜய்யின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன. இந்த அவமானம் தேவையா?
* 'ஜனநாயகன்' பட விளம்பரப் பலகைகள் கிழித்து எரியப்பட்டுள்ளன. இந்த அவமானம் தேவையா?
* மாண்டியாவில் பல திரையரங்குகளில் விஜய் படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்த அவமானம் தேவையா?
* விஜய் வருகையை எதிர்த்து மாநிலம் முழுவதும் பந்த் அறிவிக்கப் பட்டது. இந்த அவமானம் தேவையா?
* கர்நாடக - தமிழ்நாட்டு எல்லையில் தீப்பந்தம் ஏந்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள். இந்த அவமானம் தேவையா?
- இவ்வளவு அவமானங்களையும் பட்ட பிறகு, 'தமிழ்நாட்டு மக்களுக் காக எந்த அவமானத்தையும் தாங்குவேன்' என்று சொல்வதற்கு வெட்க மாக இல்லையா? இவ்வளவு நாட்கள் கழித்து எதற்காக இதைச் சொல்ல வேண்டும்?

“நட்பான ஒரு சூழலில் நாம் சந்திக்க வேண்டும் என்று நான் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இந்த நீதிமன்ற வழக்கு கள் முடியட்டும். நதிநீர் தொடர்பாக மாநிலத்தில் நிலவும் சூழ்நிலைகள் சீராகட்டும். இந்த நாட்டின் சட்டத்தை நாம் மதிக்க வேண்டும். இப்போது இருப்பதை விட இன்னும் இணக்கமான சூழலில் நாம் சந்திப்போம்” -என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சொல்வதும் -
“நான் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்துத் தான் பெங்களூருவுக்குச் செல்ல நினைத்தேன். பக்கத்து மாநிலத்தோடு பேசிப் பார்த்தால் என்ன என்று நினைத்தேன். அந்த முயற்சியில் அவமானம் நேர்ந்தால் தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்கத் தயாராக இருக்கிறேன்" என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் சொல்வதும் உலக மகா நடிப்புகளாக உள்ளது.
இரு மாநில முதலமைச்சர்களும் பேசி வைத்துக் கொண்டு ஏமாற்று கிறார்கள் என்பதை உணர முடிகிறது.
'ஜனநாயகன்' படம் கர்நாடகாவிலும் ரிலீஸ் ஆகிறது. அந்த வசூலையும் முடித்த பிறகு இப்பிரச்சினை பற்றி பேசலாம் என்று நினைத்திருந்தாரா விஜய்? ‘ஜனநாயகன்’ ரிலீஸ் புரமோஷனுக்காகத் தான் கர்நாடகா செல்லவே திட்டமிட்டாரா விஜய்? 'கர்நாடகா வருகிறார் விஜய்' என்பதன் மூலமாக அங்கு படத்தை ஓட்டத் திட்டமிட்டிருக்கிறார் விஜய் என்றே நினைக்கத் தோன்றுகிறது.






