
பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. நாட்டிலேயே இம்மாநிலங்களில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கிறது என புள்ளி விவரங்கள் கூறுகிறது.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில் 17 வயது சிறுமியை, இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோதுதான், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இது பற்றி பெற்றோர்கள் மகளிடம் கேட்டபோது கடந்த ஜூன் மாதம் ராஜ்பார் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து இளைஞர் ராஜ்பார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






