
சிவகங்கை மாவட்டம் - சிங்கம்புணரியில் உள்ள பேரறிஞர் அண்ணா மன்றத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் முழு உருவச்சிலையையும்,முன்னாள் அமைச்சர் செ.மாதவன் அவர்களின் முழு உருவச்சிலையும் திறந்துவைத்து கழக முன்னோடி மறைந்த அண்ணன் சொக்கலிங்கம் அவர்களின் திருவுருவப்படத்தையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.
மேலும்,சிவகங்கை மாவட்டக்கழகம் ஏற்பாட்டில் 125 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை வழங்கினார்.
பின்னர் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ” கழகத்தின் பவளவிழாவை கொண்டாடும் வகையில் இளைஞரணி சார்பில் சென்னையில் கடந்த 10 நாட்களாக அறிவுத்திருவிழாவை கொண்டாடி வருகிறோம். இந்த விழாவில் காலத்தின் நிறம் கருப்பு - சிவப்பு என்ற புத்தகத்தை நமது கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்த புத்தகம் அனைவர் மத்தியிலும் வரவேற்றை பெற்று வருகிறது.
ஒரு கட்சிக்கு தேவை நல்ல தலைமை. தீர்க்கமான கொள்கை. வலுவான கட்டமைப்பு. அப்படி வலுவான தலைவர்களாக பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் இருந்தார்கள். பெரியாரின் தீர்க்கமான கொள்கைகள் நம்மிடம் உள்ளது. இவை எல்லாவற்றையும் இணைத்து கழகத்தை வலுவாக கட்டமைத்துள்ளார் கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனால்தான் திமுகவை மக்கள் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மக்களை சந்தித்து நேரடியாக ஆட்சியை பிடிக்க முடியாததால், குறுக்கு வழியில் SIRஐ கொண்டு வந்து ஆட்சியை பிடிக்க முடியுமா என பா.ஜ.க நினைக்கிறது. ஆனால் அவர்கள் எத்தனை குறுக்கு வழியில் வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாவட்டார்கள்.
தி.மு.கவின் ஆதரவு வாக்குகளாக இருக்கக்கூடிய பெண்கள், முதியவர்கள், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் வாக்குகளை நீக்குவதற்கு பாஜக முயற்சி செய்கிறது. வாக்குச்சாவடியில் கருப்பு சிவப்பு வேட்டி அணிந்த கடைசி தி.மு.க தொண்டன் இருக்கும் வரை உங்களால் எந்த வாக்கயையும் நீக்க முடியாது.
இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சராக நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். நமது தலைவரின் ஆளுமையை பார்த்து மற்ற மாநில முதலமைச்சர்களே பாராட்டுகிறார்கள். அதேநேரம் பா.ஜ.கவின் நம்பர் ஒன் அடிமையாக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.
தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடகுவைத்த கட்சி அ.தி.மு.க. நமது உரிமைகளை மீட்டு பாதுகாத்து வரும் கட்சி தி.மு.க என தெரிவித்துள்ளார்.








