
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க மூன்று அணிகளாக உடைந்து, செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பா.ஜ.கவிற்கு அடிமையாக அ.தி.மு.க செயல்பட்டு வருகிது. அ.தி.மு.கவின் இந்த நடவடிக்கைக்கு மூத்த அ.தி.மு.க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து பலரும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் பா.ஜ.கவை எதிர்ப்பார்கள் என்று பொறுத்து பொறுத்து பார்த்த அதிமுக மூத்த நிர்வாகிகள், இனிமேல் அது நடக்காது என உணர்ந்த பிறகு ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசை துணிச்சலுடன் எதிர்த்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையை தேர்வு செய்து தி.மு.கவில் அணைந்து வருகிறார்கள்.
எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய நாள் முதலே அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினராக இருந்த அன்வர் ராஜா தி.மு.கவில் இணைந்துள்ளார். அதேபோல், அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் வி.மைத்ரேயன் Ex.MP அ.தி.மு.கவிலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
இந்த வரிசையில் தற்போது முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், இன்று (4-11-2025) காலை, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பால் மனோஜ் பாண்டியன் மற்றும் மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம் தி.மு.க.வில் இணைந்தனர்.
ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசை எதிர்க்கும் துணிச்சலும், தமிழ்நாட்டை பாதுகாக்கும் வலிமையும் தி.மு.கவிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் மட்டுமே உள்ளது என்பதை இது காட்டுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.








