தமிழ்நாடு

“கால்களில் விழுந்து பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

“இன்றைக்கு ஒன்றிய அரசு ஒரு திட்டம் கொண்டு வருகிறது என்றால் தமிழ்நாடு என்ன முடிவு எடுக்கிறது என மற்ற மாநிலங்கள் உற்று நோக்கி அதன் பின் முடிவெடுக்கிறார்கள்.”

“கால்களில் விழுந்து பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தி.மு.கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் கழக நிர்வாகிகளுக்கு தேர்தல் கள ஆயத்தப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பின்வருமாறு,

“நம் இயக்கம் எத்தனையோ சவால்களையும், நெருக்கடிகளையும் கடந்து 76 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையிலும் அதே வலிமையோடும், இளமையுடனும் நம் இயக்கம் செயல்பட்டு கொண்டு இருக்கிறது,

நம் குழந்தையை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உள்ளது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என பெற்றோர்கள் போற்றும் அரசாக, நம் திராவிட மாடல் அரசு செயல்பட்டு கொண்டு வருகிறது

தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டங்களால் இந்தியாவிலே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. இந்த அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் மட்டும் ரூ.39 கோடி மதிப்பீட்டில் அப்துல்லா புரத்தில் நான்கு வழி சாலை, ரூ. 20 கோடியில் 50 படுக்கைகள் வசதியுடன் கூடிய மருத்துவமனை;

முதலமைச்சர் சாலை திட்டம் மூலம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள், ரூ.19 கோடி மதிப்பீட்டில் சதுப்பு நிலப்பகுதிகளை சுற்றுலாத் தலமாக மாற்றும் பணி, ரூ.50 கோடி மதிப்பீட்டில் ஓட்டேரி ஏரியை நவீனப்படுத்துதல், அப்துல்லா புரத்தில் டைடல் பார்க் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

“கால்களில் விழுந்து பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

2026 இல் நாம் வெற்றி பெற்றவுடன் இந்த தொகுதிக்கு மேலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளார்.

இவ்வாறு, தமிழ்நாடு முழுவதற்கும் பல நல்ல திட்டங்களை வழங்குவதை பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றிய அரசு இந்தி திணிப்பு, புதிய கல்விக் கொள்கை, குலக்கல்வி திட்டம் போன்றவற்றை கொண்டு வந்து, தொகுதி மறுசீரமைப்பு என எண்ணற்ற இடைஞ்சல்களையும் தருகிறார்கள்.

இன்றைக்கு ஒன்றிய அரசு ஒரு திட்டம் கொண்டு வருகிறது என்றால் தமிழ்நாடு என்ன முடிவு எடுக்கிறது என மற்ற மாநிலங்கள் உற்று நோக்கி அதன் பின் முடிவெடுக்கிறார்கள்.

பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பொய்யான செய்தியை மோடி பேசி வருகிறார். இன்னும் நான்கு மாதத்தில் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வர இருக்கும் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் இப்படி பேசிவிட்டு திரும்பிச் செல்ல முடியுமா?

ஒன்றிய பாஜக அரசு, தேர்தல் ஆணையம் மூலம் பீகாரில் சிறுபான்மையினர், பெண்கள் என 65 லட்சம் பேரின் வாக்குகளை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது.

எனவே, நாம் விழிப்புணர்வாக செயல்பட்டு S.I.R-ஜ எதிர்கொள்ள வேண்டும். அமித்ஷாவே தேர்தல் ஆணையராக வந்தாலும் தமிழ்நாட்டில் காவிகளால் கால் ஊன்ற முடியாது.

எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தின் போது அதிமுகவை கழுவி ஊற்றும் ஒரு கட்சியின் கொடியை பார்த்து பிள்ளையார் சுழி போட்டு விட்டதாக குஷியாகி கொள்கிறார். இப்படி ஒரு கேவலமான அரசியல்வாதி இந்தியாவிலே வேறு யாரும் இருக்க முடியாது.

முதலில் ஜெயலலிதா கால், பிறகு சசிகலா கால், பின்னர் டிடிவி தினகரன் கால், அதன் பிறகு, மோடி, அமித்ஷா கால்கள் என விழுந்து பழக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி புதிய கால்களை தேடி அலைகிறார்.

இவ்வேளையில், தமிழ்நாட்டில் 941 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்கியுள்ளார் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அண்மையில் தேஷஸ்வி யாதவ் கூட, நம் அரசின் திட்டங்களை பாராட்டி பீகாரில் பேசியிருந்தார். மற்ற மாநில முதலமைச்சர்கள் பின்பற்றும் அரசாக, பாராட்டும் அரசாக தமிழ்நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நம் கழகம் 7ஆவது முறையாக ஆட்சி அமைக்கவும், நம் தலைவர் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்கவும் பாடுபடுங்கள்!

banner

Related Stories

Related Stories