தமிழ்நாடு

”பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” : Chennai Press Club கண்டனம்!

பத்திரிகையாளர்களை மிரட்டிய அண்ணாமலைக்கு, சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

”பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” : Chennai Press Club கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டு பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து பத்திரிகையாளர்களை மிரட்டும் போக்கை கடைபிடித்து வருகிறார். இன்று கூட கமலாலயத்தில் செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்துள்ளார்.

அப்போது ANI செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் திவ்யவிக்னேஷ், அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு அண்ணாமலை பதில் சொல்லாமல் ஒருமையில் பேசி மிரட்டியுள்ளார். அண்ணாமலையின் இந்த நடவடிக்கைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், பொது வாழ்க்கைக்கு வந்துள்ள அண்ணாமலையிடம் கேள்வி கேட்பது பத்திரிகையாளரின் உரிமை மற்றும் கடமை. அவரது தனிப்பட்ட விவகாரங்கள் குறித்தோ, அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ செய்தியாளர் கேள்வி கேட்கவில்லை.

இந்த கொடுமையான நிகழ்வு குறித்து எதிர்கட்சி என்ற அடிப்படியில் அண்ணாமலையின் கருத்தை கேட்ப்பது செய்தியாளரின் கடமை. இதற்கு பதில் அளிப்பதும், பதில் அளிக்காமல் கடந்து செல்வதும் அண்ணாமலையின் உரிமை. ஆனால், கேள்வி கேட்ட பத்திரிகையாளரை ஒருமையில் பேசியதுடன் அவரை மிரட்டியும் உள்ளார். பத்திரிகையாளர்களிடம் அண்ணாமலை இவ்வாறு கீழ்த்தரமாக நடந்துகொள்வது.

இது முதல்முறையல்ல. தொடர்ந்து இவ்வாறு நடந்துகொள்ளும் அண்ணாமலையை வன்மையாக கண்டிக்கிறோம். பா.ஜ.க தலைமை உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories