
தி.மு.க துணைப் பொதுச் செயலாளர்களாக க.பொன்முடி மற்றும் மு.பெ.சாமிநாதன் ஆகியோரை நியமித்து கழக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், திருப்பூர் மாவட்டப் பொறுப்பாளராக பணியாற்றி வந்த மு.பெ.சாமிநாதன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழப் பொறுப்பாளராக இல.பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த இல.பத்மநாபன், திருப்பூர் மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் அவருக்குப் பதிலாக கே.ஈஸ்வரசாமி திருப்பூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், வேலூர் தெற்கு வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராக ஏ.பி.நந்தகுமாரும், வேலூர் வடக்கு, காட்பாடி, கீழ்வைத்தியணாக்குப்பம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக டி.எம்.கதிர்ஆனந்த் ஆகியோர் நியமனம் செய்து கழக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.








