
ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். இந்த பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெரும் மாணவர்களே தங்கள் மேற்படிப்பை தொடர இயலும் என்பதால் இது அவர்களுக்கு ஒரு சோதனை கட்டமாகவே பார்க்கப்படுகிறது. எனவே இதற்காக மாணவர்கள் இரவும் பகலும் கண்விழித்து படிப்பர். மேலும் இந்த பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகள் தீவிர பயிற்சியும் கொடுப்பர்.
இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் மாணவர்கள் நலன் கருதி, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது.
இதன் தொடர்ச்சியாக தற்போது 10, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரியர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை.

இதில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தமிழ் முதல் சமூக அறிவியல் வரையிலான பாடத்திற்கான தேர்வு தேதி, இதோ :-
செய்முறை தேர்வு : பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 28-ம் தேதி வரை
தேர்வு முடிவுகள் : மே 20

12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தமிழ் முதல் அவரவர் பிரிவு பாடம் வரையிலான தேர்வு தேதி, இதோ :-
செய்முறை தேர்வு : பிப்ரவரி 9-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தேர்வு முடிவுகள் : மே 8

2018 முதல் 2025-ம் ஆண்டு மாணவர்களுக்கான 11-ம் வகுப்பு அரியர் தேர்வு அட்டவணை :-
செய்முறை தேர்வு : பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தேர்வு முடிவுகள் : மே 20









