தமிழ்நாடு

கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?

கல்லறைத் தோட்டங்கள், கபர்ஸ்தான்கள் அமைத்திட நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவ்விடங்களை பராமரிக்க உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்கிடுவதற்கானை ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (1.11.2025) தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் விருதுநகர், தேனி, இராமநாதபுரம், திருவள்ளூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கிறித்தவர்களுக்கான அரசு பொது கல்லறைத் தோட்டங்கள் மற்றும் விருதுநகர், தேனி, திருவள்ளூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இஸ்லாமியர்களுக்கான அரசு பொது கபர்ஸ்தான்கள் அமைத்திட நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவ்விடங்களை சுற்றுச்சுவர், பெயர் பலகை மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை அமைத்து முறையாக பராமரிக்க உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்கிடும் விதமாக அதற்கான ஆணையினை நகராட்சி ஆணையர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரிடம் வழங்கினார்.

கிறித்தவர்களுக்கான கல்லறைத் தோட்டங்கள், இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான் இல்லாத மாவட்டத் தலைநகரங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மாநகராட்சி/நகராட்சி சார்பில் கல்லறைத் தோட்டம் / கபர்ஸ்தான் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று 9.1.2024 அன்று தலைமைச் செயலகத்தில், நடைபெற்ற சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.

அதன்படி, விருதுநகர் மாவட்டம் – கோட்டைபட்டி, தேனி மாவட்டம் – அல்லிநகரம், இராமநாதபுரம் மாவட்டம் – சக்கரக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டம் – திருப்பாச்சூர், பெரம்பலூர் மாவட்டம் – எளம்பலூர், சிவகங்கை மாவட்டம் – அரசணி ஆகிய இடங்களில் கிறித்தவர்களுக்கான அரசு பொது கல்லறைத் தோட்டங்கள் அமைக்கவும், விருதுநகர் மாவட்டம் – கோட்டைபட்டி, தேனி மாவட்டம் – அல்லிநகரம், திருவள்ளூர் மாவட்டம் – திருப்பாச்சூர், பெரம்பலூர் மாவட்டம் – எளம்பலூர், சிவகங்கை மாவட்டம் – அரசணி ஆகிய இடங்களில் இஸ்லாமியர்களுக்கான அரசு பொது கபர்ஸ்தான்கள் அமைக்கவும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுற்றுச்சுவர், பெயர் பலகை மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை அமைத்து முறையாக பராமரிக்க உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்கிடும் விதமாக அதற்கான ஆணையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றையதினம் நகராட்சி ஆணையர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரிடம் வழங்கினார்.

இந்நிகழ்வில், மேற்கண்ட மாவட்டங்களைச் சார்ந்த கிறித்தவ மற்றும் இஸ்லாமிய பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

banner

Related Stories

Related Stories