
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (1.11.2025) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஈரோடு, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருநெல்வேலி அரியலூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 1,177 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலைப்பணிகள் மற்றும் வேலூர் மாவட்டத்தில் 71 கோடியே 9 இலட்சம் ரூபாய் செலவில் இரயில்வே கடவுகளுக்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள இரண்டு சாலை மேம்பாலங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை உட்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு அரசு தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை உருவாக்கிடும் வகையில், நெடுஞ்சாலை துறை வாயிலாக மாநிலம் முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், மேம்பாடு செய்தல், புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல் ஆகிய பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.
கட்டி முடிக்கப்பட்டுள்ள 10 சாலைப் பணிகள் மற்றும் இரு சாலை மேம்பாலங்களை திறந்து வைத்தல்
ஈரோடு மாவட்டத்தில் 272 கோடியே 53 இலட்சம் ரூபாய் செலவில் (மாநில நெடுஞ்சாலை எண் 15) (கி.மீ 123-153/6) 30.60 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தப்பட்ட கோபி - ஈரோடு சாலை;
மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் 221 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் 10 மீ அகல இருவழிச்சாலையாக (மாநில நெடுஞ்சாலை 23-1) (கி.மீ 4/5-20/925) 16.425 கி.மீ நீளத்திற்கு தரம் உயர்த்தப்பட்ட மயிலாடுதுறை – திருவாரூர் சாலை;
தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 197 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் 10 மீ அகல இருவழிச்சாலையாக (மாநில நெடுஞ்சாலை –66) (கி.மீ. 3/6-8/6) 5.0 கி.மீ நீளத்திற்கும் மற்றும் (கி.மீ 13/9-கி.மீ 23/8) 9.90 கி.மீ நீளத்திற்கும் தரம் உயர்த்தப்பட்ட கும்பகோணம் - மன்னார்குடி சாலை;

திருவள்ளூர் மாவட்டத்தில் 111 கோடி ரூபாய் செலவில் (கி.மீ. 7/0-18/4) 11.40 கி.மீ நீளத்திற்கு இரு வழிப்பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட கொரட்டூர் - தின்னனூர் - பெரியபாளையம் சாலை மற்றும் 82 கோடி ரூபாய் செலவில் (கி.மீ.7/0-16/2) 9.20 கி.மீ நீளத்திற்கு இரு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட திருவள்ளூர் - அரக்கோணம் சாலை;
திருநெல்வேலி மாவட்டத்தில் 65 கோடியே 99 இலட்சம் ரூபாய் செலவில் (கி.மீ 0/0-6/049) 6.049 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்ட அம்பாசமுத்திரம் புறவழிச் சாலை;
முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அரியலூர் மாவட்டத்தில் 60 கோடி ரூபாய் செலவில் (கி.மீ 6/8-14/8) 8.0 கி.மீ நீளத்திற்கும், 62 கோடி ரூபாய் செலவில் (கி.மீ. 14/8-21/0) 6.20 கி.மீ நீளத்திற்கும் மற்றும் 63 கோடி ரூபாய் செலவில் (கி.மீ. 21/0-27/6)6.60 கி.மீ நீளத்திற்கும் (மாநில நெடுஞ்சாலை-140) இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் - மதனத்தூர் சாலை;
மதுரை மாவட்டத்தில் 41 கோடியே 89 இலட்சம் ரூபாய் செலவில் திருப்பரங்குன்றம், மதுரை - திருமங்கலம் சாலைப்பகுதி (மாநில நெடுஞ்சாலை- நகர்பகுதி எண்.101); கி.மீ.2/550- 3/750-ல் வலதுபுறத்தில் உள்ள தென்கால் கண்மாய் கரைவழியாக 1.20 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்ட இருவழிச்சாலை;
வேலூர் மாவட்டத்தில் 35 கோடியே 99 இலட்சம் ரூபாய் செலவில் கூடநகரம் - அனங்காநல்லூர் சாலையில் கி.மீ 3/0-ல் இரயில்வே கி.மீ. 160/2-4ல் உள்ள கடவு எண்.67-க்கு மாற்றாக மேலாலத்தூர் - வளத்தூர் இரயில் நிலையங்களுக்கிடையே கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம்;
லட்சுமி அம்மாள்புரம் - நாவிதம்பட்டி சாலையில் கி.மீ 0/2-ல் இரயில்வே கி.மீ. 168/12-14ல் உள்ள கடவு எண்.72-க்கு மாற்றாக மேல்பட்டி - வளத்தூர் இரயில் நிலையங்களுக்கிடையே 35 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம்;
என மொத்தம் 1248 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 10 சாலைகள் மற்றும் இரு சாலை மேம்பாலங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.








