
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.10.2025) தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில், 141 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவிலான 117 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 291 கோடியே 19 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 83 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2,44,469 பயனாளிகளுக்கு 587 கோடியே 39 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தென்காசி மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், சங்கரன்கோவில், மேலகலங்கல் ஆகிய இடங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், குலசேகரமங்கலம், நக்கலமுத்தம்பட்டி, குலசேகரப்பேரி, மரியதாய்புரம் ஆகிய இடங்களில் நியாயவிலைக் கடைகள், திருமலாபுரம், அய்வாய்ப்புலிப்பட்டி ஆகிய இடங்களில் கலையரங்கங்கள், கடம்பன்குளம், மலையான்குளம், செவல்குளம், வாகைக்குளம் ஆகிய இடங்களில் சமுதாய நலக்கூடங்கள், சங்கரலிங்கபுரத்தில் பல்நோக்கு மையக் கட்டடம், தோப்புரெட்டியபட்டி, சத்திரகொண்டான் ஆகிய இடங்களில் பயணிகள் நிழற்குடைகள், கே.புதூர், காரிச்சாத்தான், இலத்தூர் ஆகிய இடங்களில் துணை மற்றும் வட்டார சுகாதார மையக் கட்டடங்கள், ஏமன்பட்டியில் அங்கன்வாடி மையக் கட்டடம், மேலகலங்கல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, வென்றிலிங்கபுரம், கேளையாபிள்ளையூர், உள்ளார் தளவாய்புரம், தெற்கு அய்வாய்ப்புலிப்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், பொட்டல்புதூர் புதுச்சேரி – வெங்கடாம்பட்டி, மலையான்குளம் – இராவுத்தப்பேரி, கோவிரலான்டானூர் – ஆவுடையாள்புரம், புளியன்குளம் – கொம்பன்குளம், பனையூர் – கூடலூர், தென்மலை-சோலைசேரி, சோலைசேரி-செந்தட்டியாபுரம், அ.மருதப்பபுரம்-குறிப்பன்குளம், நெட்டுர் அருந்ததியர் மயானச் சாலை, உடையாம்புலி-கொல்லன்குளம், ஆம்பூர்-கருத்தப்பிப்ளையூர், கடையநல்லூர்-வலசை, மேலப்பாவூர், வரகனூர்-செல்லப்பட்டி, இராஜபாளையம் – சங்கரன்கோவில் - ஆயாள்பட்டி, தென்மலை – அம்பை சாலை முதல் சில்லரைப்பரவு, கூடலூர்-நாதகிரி முருகன் கோவில் கிரிவலம் சாலை, சண்முகநாதபுரம்-இராயகிரி ஆகிய இடங்களில் மேம்படுத்தப்பட்ட சாலைகள், கோவிலாண்டானூரில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் என மொத்தம் 32 கோடியே 56 இலட்சத்து 31 ஆயிரம் ரூபாய் செலவில் 43 முடிவுற்றப் பணிகள்;
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், மேலநீலிதநல்லூரில் 1 கோடி ரூபாய் செலவில் நடுவக்குறிச்சி அரசு தோட்டக்கலை பண்ணை, கடையத்தில் 1 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவில் எலுமிச்சை சிறப்பு மையம்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், குருவிகுளத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் அரசு ஆரம்ப சுகாதார மையம், தென்காசி அரசு மருத்துவமனையில் 22 கோடி ரூபாய் செலவில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக் கட்டடம், தென்காசியில் 1 கோடி ரூபாய் செலவில் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம், இலத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 73 இலட்சம் ரூபாய் செலவில் தடுப்பூசி கிடங்கு, குருவிகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 16 இலட்சம் ரூபாய் செலவில் காசநோய் பிரிவு;
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், பண்பொழி, வாசுதேவநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள், ஆய்க்குடி அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 1 கோடியே 82 இலட்சம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், சிறுநீர் கழிப்பிடத் தொகுதிகள், அச்சன்புதூர், ஆய்க்குடி, கீழப்பாவூர் ஆகிய இடங்களில் 95 இலட்சம் ரூபாய் செலவில் சுகாதார துணை மையங்கள், இராயகிரி பேரூராட்சியில் 2 கோடியே 49 இலட்சம் ரூபாய் செலவில் நீர் வழங்கல் பணிகள், இலஞ்சியில் 22 இலட்சம் ரூபாய் செலவில் நூலகக் கட்டடம், ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் 14 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட நீர் விநியோகப் பணிகள்;

தென்காசி-திருநெல்வேலி பிரதான சாலையில் 5 கோடியே 32 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தினசரி சந்தை, போகநல்லூர், அண்ணாநகர் ஆகிய இடங்களில் உள்ள உரக்கிடங்குகளில் 92 இலட்சம் ரூபாய் செலவில் நுண்ணுயிர் உரக்குடில்கள், தென்காசி நகராட்சி தினசரி சந்தையில் 40 இலட்சம் ரூபாய் செலவில் பொதுசுகாதார வளாகம், தென்காசி நகராட்சியில் 25 இலட்சம் ரூபாய் செலவில் குடிநீர் குழாய்கள், தென்காசி நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் 16 இலட்சம் ரூபாய் செலவில் கழிப்பறைகள், ஊர்க்காடு தலைமை நீரேற்றும் நிலையத்தில் 21 இலட்சத்து 33 ஆயிரம் ரூபாய் செலவில் உறைகிணற்றில் பொருத்தப்பட்ட மோட்டார், மலையான்தெரு கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, வாய்க்கால்பாலம் நீருந்து நிலையம் ஆகிய இடங்களில் 20 இலட்சம் ரூபாய் செலவில் பொருத்தப்பட்ட கிருமி நாசினி இயந்திரங்கள், தென்காசி நகராட்சியின் பல்வேறு இடங்களில் 91 இலட்சம் ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் பணிகள்,
தென்காசி நகராட்சியின் பல்வேறு இடங்களில் 3 கோடியே 7 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் தார்சாலைப் பணிகள், சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில் 1 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவப் பயனாளிகளின் உதவியாளர்கள் தங்குமிடம், சங்கரன்கோவில் நகராட்சியில் 57 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் தார்ச்சாலைப் பணிகள், கடையநல்லூர் நகராட்சியில் 5 கோடியே 7 இலட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலவில் பல்வேறுப் பகுதிகளில் சாலைப் பணிகள், சமுதாயக் கூடம், பேவர் பிளாக் பணிகள், தார்ச்சாலைப் பணிகள், நீர் விநியோகத்திற்கான குழாய் பாதைகள் இணைப்புப் பணிகள்,
புளியங்குடி நகராட்சியின் பல்வேறு பகுதியில் 4 கோடியே 50 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட தார் சாலைப் பணிகள், செங்கோட்டை நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் 2 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சாலைகள், பேவர் பிளாக் பணிகள், சுரண்டை நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் 15 கோடியே 38 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் செலவில் கீழசுரண்டை கலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மலக்கசடு சுத்திகரிப்பு நிலையம், சிமெண்ட் சாலைகளை பேவர் பிளாக் சாலைகளாக மேம்படுத்தப்பட்ட பணிகள், நடைபாதைத் தடுப்புகள், புதிய சாலைப் பணிகள், திறந்தவெளி கிணறு, பம்ப்செட், சுற்றுச்சுவர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, வடிகால் மற்றும் மதகுகள், சமுதாயக் கூடம் மற்றும் சமையலறை கொட்டகை;
ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வரதையன், பாலமார்த்தாண்டபுரம், திருமலையப்பபுரம் ஆகிய இடங்களில் 43 இலட்சத்து ஆயிரம் ரூபாய் செலவில் அங்கன்வாடி மையக் கட்டடங்கள்;
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில், குற்றாலத்தில் 2 கோடியே 50 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் நாட்டுப்புற கலைகள் மற்றும் பழங்குடியினர் அருங்காட்சியகம்;

வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் 3 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவில் சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்;
பள்ளிக் கல்வித் துறை சார்பில், இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 3 கோடியே 70 இலட்சத்து 81 ஆயிரம் ரூபாய் செலவில் மாவட்ட மைய நூலகம் மற்றும் மாவட்ட நூலக அலுவலகம், மாறாந்தை, பூலாங்குளம், கூடலூர் ஆகிய அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 4 கோடியே 43 இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் வகுப்பறைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள்;
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், வேளாண்மை, கிராமப்புற மேம்பாடு மற்றும் கிராமப் புற சாலைகள் திட்டத்தின் கீழ் சங்கரன்கோவிலில் (பருவக்குடி-கோவில்பட்டி) 6 கோடியே 93 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்மட்டப் பாலம்;
என மொத்தம், 141 கோடியே 59 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாய் செலவிலான 117 முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், கீழப்புதூரில் சமுதாய நலக் கூடம், வெள்ளக்கவுண்டம்பட்டியில் புதிய திறந்த வெளிக்கிணறு, சாலைப் பணிகள் மற்றும் வடிகால் அமைக்கும் பணிகள், நெல்கட்டும்செவல் ஊராட்சியில் பூலித்தேவன் நினைவு திருமண மண்டபத்தில் உணவு அருந்தும் அறை மற்றும் அலுவலக அறை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறைகள், சாலைப் பணிகள், வடிகால் அமைக்கும் பணிகள், உமையத்தலைவன்பட்டியில் நிட்சேபநதி ஆற்றின் குறுக்கே பாலம், கல்லூரணி, குலசேகரப்பட்டி, மருதன்கிணறு, வடக்குப்பணவடலி, குருக்கள்பட்டி, இடைகால், செந்தட்டியாபுரம், கரிவலம்வந்தநல்லூர், கம்பனேரி, கலிங்கப்பட்டி, திரிகூடபுரம், நாலாந்துலா, ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, கிளாங்காடு, சித்திரம்பட்டி, சாயமலை, வல்லம், குறிச்சான்பட்டி, மேலகலங்கல், வேலாயுதபுரம் ஆகிய பல்வேறு இடங்களில் சாலைப் பணிகள், வேலாயுதபுரம் கிராமத்தில் 60,000 லிட்டர் தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டியுடன் குடிநீர் இணைப்பு, ஆயாள்பட்டியில் கலையரங்கம், இராஜபாண்டி, வெய்காலிப்பட்டி ஆகிய இடங்களில் துணை சுகாதார மையங்கள், வாசுதேவநல்லூர், நாரணாபுரம் ஆகிய இடங்களில் தடுப்பணைகள், நலங்குறிச்சி-மாறாந்தையில் புதிய ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் பாதை நீட்டிப்பு செய்யும் பணிகள் என மொத்தம் 24 கோடியே 8 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 51 பணிகள்;
குலையநேரி, நயினாபுரம், வேதம்புத்தூர் ஆகிய இடங்களில் 7 கோடியே 4 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டடங்கள், செங்கோட்டையில் பாரம்பரிய திருவிதாங்கூர் நினைவு வளைவின் கட்டுமானம் 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைக்கும் பணிகள்;
எரிசக்தித் துறை சார்பில், இராயகிரி, குருக்கள்பட்டி, ஐந்தாம்கட்டளை, தாழை சுப்பிரமணியபுரம், கடங்கனேரி-வெங்கடேசபுரம் ஆகிய இடங்களில் 36 கோடியே 49 இலட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் துணை மின் நிலையங்கள்;
மகளிர் நலன் மற்றும் சமூக நலத் துறை சார்பில், தென்காசி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 4 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தோழி விடுதி;
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சிவகிரி பேரூராட்சி – சிவராமலிங்கபுரம் பள்ளி தெருக்கள் மற்றும் ஓடைத் தெரு, பெரியகடை பஜார் மற்றும் காமராஜர் மேற்குத்தெரு ஆகிய இடங்களில் 4 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலங்கள், அனந்தபுரத்தில் 2 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தினசரி சந்தை, ஆலங்குளம் பேரூராட்சியில் 34 கோடியே 91 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் மேம்படுத்துதல், குடிநீர் திட்டப் பணிகள், புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டடம், அச்சன்புதூர், புதூர் (எஸ்), சாம்பவர் வடகரை ஆகிய பேரூராட்சிகளில் 3 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமூகநலக் கூடங்கள், வாசுதேவநல்லூர் அரசு மருத்துவமனையில் 65 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொது சுகாதார பிரிவுக் கட்டடம், தென்காசியில் நகராட்சியில் 69 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் வழங்கல் திட்டப் பணிகள்;
நீர்வளத் துறை சார்பில், சாம்பவர் வடகரை–ஹனுமாநதி ஆற்றின் குறுக்கே 5 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை, இராமநதிஅணையின் கரை 1 கோடியே 58 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணிகள்;
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், கலிங்கப்பட்டியில் 65 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை மருந்தகக் கட்டடம்;
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில்,
94 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சங்கரன்கோவில் மற்றும் தென்காசி புறவழிச்சாலைகள் அமைக்கும் பணிகள்;
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், வாசுதேவநல்லூரில் 6 கோடியே 58 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் சேமிப்புக் கிடங்கு;

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில், பசுமைப் பள்ளித் திட்டத்தின் கீழ் ஊத்துமலை, வீரசிகாமணி, ஆழ்வார்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்,
பள்ளிக் கல்வித் துறை சார்பில், கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 17 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஆய்வகம், வீரசிகாமணியில் 49 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நூலகக் கட்டடம்;
என மொத்தம், 291 கோடியே 19 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 83 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.
தென்காசி மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 50,650 பயனாளிகளுக்கு கிராமக்கணக்கில் மாறுதல் செய்யாத இனங்களில் பட்டாக்கள் வழங்குதல், நத்தம் பட்டாக்கள், வகைபாடு மாற்றம், வரன்முறைப்பட்டாக்கள், கடையநல்லூர் நகர நில அளவை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், 6,230 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டம், பிரதமர் வீட்டுவசதித் திட்டம், முதல்வரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டம், இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாமில் வீடு கட்டும் திட்டம், திருநங்கைகளுக்கான வீடு கட்டும் திட்டம் ஆகிய பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், 20,667 பயனாளிகளுக்கு முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், மாநில வேளாண் வளர்ச்சி திட்டம், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம், நுண்ணுயிர் பாசன திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள்;
வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில், 201 பயனாளிகளுக்கு விவசாயிகளுக்கான அடமானக் கடன்கள், வேளாண் இடுபொருட்கள் ஏற்றுமதி பயிற்சிகள், இ-நாம் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை பயனுள்ள பயன்பாடு குறித்த பயிற்சிகள், வேளாண் உள்கட்டமைப்பு நிதி ஆகியவற்றின் கீழ் உதவிகள், வேளாண் பொறியியல் துறை சார்பில், 571 பயனாளிகளுக்கு வேளாண் இயந்திரமயமாக்கல் துணை திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், கலைஞரின் அனைத்து கிராமங்கள் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் கீழ் உதவிகள், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், 67,953 பயனாளிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம், மாநில தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம், மாநில தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத் திட்டம், நுண் நீர்ப்பாசனம், பனை மேம்பாட்டுத்திட்டம், மானாவாரிப் பகுதி மேம்பாட்டுத் திட்டம், தேசிய தோட்டக்கலை மிஷன் காய்கறி மற்றும் பழ தாவர தொகுப்புகள் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள்;
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், 3000 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், கூட்டுறவுத் துறை சார்பில், 28,300 பயனாளிகளுக்கு பயிர்க்கடன், நகைக் கடன், பண்ணை சாரா கடன், வீட்டுக்கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன், வீட்டு அடமான கடன், மாற்றுத்திறனாளி கடன், பெண் தொழில் முனைவோர், வேலை செய்யும் பெண்களுக்கான கடன்கள், சிறு வணிக கடன், விதவைக் கடன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் கடன், நாட்டுப்புறக் கலைஞர், தாட்கோ, டாப்செட்கோ, கல்விக்கடன், கலைஞரின் கைவினை திட்டம் ஆகிய பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில், 200 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், தேய்ப்பு பெட்டி, பிற்படுத்தப்பட்டோர் நலவாரிய அட்டைகள், கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய அட்டைகள்;
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், 550 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள், பேட்டரி சக்கர நாற்காலிகள், புதுப்பிக்கப்பட்ட மூன்று சக்கர வாகனங்கள், நுண்ணறிபேசிகள், மடிக்கக்கூடிய சக்கர நாற்காலிகள், காதொலி கருவிகள், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில், 3616 பயனாளிகளுக்கு சுய தொழில் செய்பவர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான முதலமைச்சரின் எழுச்சித் திட்டம், நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், தனிநபர் கடன் ஆகிய பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரிய அடையாள அட்டைகள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு அட்டைகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், 599 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், தேய்ப்பு பெட்டிகள், பழங்குடியினர் நலவாரிய அட்டைகள்;
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 4,153 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை, விபத்து மரண உதவித் தொகை, தீரா நோய்க்கான உதவித் தொகை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 15,000 பயனாளிகளுக்கு வாழ்வாதார நிதியின் கீழ் உதவிகள், 18266 பயனாளிகளுக்கு சுய உதவிக்குழு அடையாள அட்டைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில், 565 பயனாளிகளுக்கு கல்விக் கடன் உதவிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், 1039 பயனாளிகளுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவிகள், சமையல் உதவியாளர்களுக்கான பணி நியமன ஆணைகள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 3,000 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம், 11,276 பயனாளிகளுக்கு டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம், 7,954 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்புத் திட்டம், தொழில் வணிகத் துறை சார்பில், 500 பயனாளிகளுக்கு கலைஞரின் கைவினைத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம் ஆகியவற்றின் கீழ் உதவிகள்;
என பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 587 கோடியே 38 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2,44,469 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வழங்கினார்.








