தமிழ்நாடு

சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!

சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ள 33 வீரர்களுக்கு ரூ.43.20 லட்சம் நிதியுதவி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உலகின் எப்பகுதியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளிலும் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றார்.

இந்த அறக்கட்டளை நிதியின் கீழ் தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களுக்கு தேவையான அதிநவீன விளையாட்டு உபகரணங்களை வாங்கி கொள்ளவும், தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்கான செலவு, தங்குமிடம், பயிற்சி பெறுதல், பயணத்திற்கான செலவுகளை மேற்கொள்ள நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (24.10.2025) முகாம் அலுவலகத்தில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 17.11.2025 முதல் 24.11.2025 வரை தாய்லாந்தில் நடைபெறும் உலக திறன் விளையாட்டு போட்டிகளில் (World Ability Sports Games 2025) கலந்து கொள்ள உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய பாரா சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் பா.மனோஜ், அருள்ராஜ் பாலசுப்பிரமணியன், செ.முனியசாமி, த. கதிர், க.கணேசன், கே.எம்.ஷேக் அப்துல் காதிர், குமரேசன் ஆனந்தன், சா. வினோத் குமார், ரா.பிரவீன் குமார், ச. குரு பாஸ்கர சேதுபதி, வே.பிரகாஷ், மு. சோனை, ச.பிரசாந்த், கெவின் ஜோசப் ஆண்டனி, க. சஞ்சய் கன்னா, ரா.கோகுலகண்ணன், மு. ஆனந்த்ராஜ், பி.சந்தனகுமார், வீராங்கனைகள் கு. ஆனந்தி, ர. வெண்ணிலா, சி. இன்பத்தமிழி, கு. விஜயஸ்ரீ ஆகிய 22 மாற்றுத்திறன் விளையாட்டு வீரர், வீரங்கனைகளுக்கு போட்டியில் கலந்து கொள்வதற்கான செலவினமாக தலா 1,65,000/- ரூபாய் என மொத்தம் 36,30,000 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!

மேலும் 2.12.2025 முதல் 6.12.2025 மாலத்தீவில் நடைபெற உள்ள 7வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ள உள்ள தேசிய அளவிலான கேரம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரங்கனைகள் எல்.கீர்த்தனா, எஸ்.இளவழகி, 6வது கேரம் உலகக்கோப்பை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை வி.மித்ரா ஆகிய 3 விளையாட்டு வீரங்கனைகளுக்கு போட்டிக்கான செலவினமாக தலா 1,50,000/- ரூபாய் என மொத்தம் 4,50,000 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் தடகள விளையாட்டு வீராங்கனைகள் பி. கனிஸ்ரீ, ரூபிகா, எ.தாரணி, எம். நந்தனா, பார்த்திபா செல்வராஜ், கே. யாமினி, விஐயலட்சுமி, கே. நத்தினி ஆகிய 8 வீராங்கனைகளுக்கு பயிற்சிக்கான விளையாட்டு உபகரணங்கள் வாங்கிட தலா 30,000/- ரூபாய் என மொத்தம் 2,40,000 ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.

இன்றைய தினம் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 22 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உட்பட 25 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்காகவும், 8 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வாங்குவதற்காகவும் மொத்தம் 33 வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் 43.20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

banner

Related Stories

Related Stories