தமிழ்நாடு

பீகார் தேர்தல் : கட்சியிலிருந்து விலகும் மூத்த தலைவர்கள் - அதிர்ச்சியில் நிதிஷ்குமார்!

பீகாரில் பாஜக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டிற்கு பிறகும் கட்சிகளுக்குள் கடும் அதிருப்தி நிலவுகிறது.

பீகார் தேர்தல் : கட்சியிலிருந்து விலகும் மூத்த தலைவர்கள் - அதிர்ச்சியில் நிதிஷ்குமார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என தீவிர தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், பா.ஜ.க கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளிடையே கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எம்எம்ஏ கோபால் மண்டல் என்பவர், முதலமைச்சர் நிதிஷ்குமாரை சந்திக்க அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர், திடீரென நிதீஷ்குமார் வீட்டின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தமக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும், அதனை நிதிஷ் குமார் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் தங்களுக்கு அதிக தொகுதிகள் வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இதனால் கூட்டணி பங்கீட்டிலும் இழுபறி நிலவி வருகிறது. அதோடு, வேட்பாளர்கள் தேர்வு செய்வதிலும் இழுபறி உள்ளது. தங்களுக்கு சீட் கொடுக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories