தமிழ்நாடு

நெருங்கும் வடகிழக்கு பருவமழை... சுகாதாரத்துறை ஏற்பாடுகள் என்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

வடகிழக்கு பருவமழையொட்டி நோய் பரவாமல் தடுக்க தமிழகத்தில் 10,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

நெருங்கும் வடகிழக்கு பருவமழை... சுகாதாரத்துறை ஏற்பாடுகள் என்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் PM SVANidhi திட்டத்தின் கீழும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் வங்கி முன்னெடுப்பில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் வகையில் வங்கி கடன் வழங்கும் முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சரியான நேரத்தில் கடனை திருப்பிக் கொடுத்தால் அதிக கடனை வழங்கும் வசதி, பெண் தொழில் முனைவோர்கள், சாலையோர வியாபாரிகள் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் என புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு கடன் வழங்கும் திட்டமாக செயல்பட்டு வருகிறது.

ஏற்கனவே சாலையோர வியாபாரிகளாக இருப்பவர்கள், மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்டவர்கள் எல்லாம் இங்கு வரவழைக்கப்பட்டு, வங்கி அலுவலர்களும், மாநகராட்சி அதிகாரிகளும் பங்கேற்று முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நெருங்கும் வடகிழக்கு பருவமழை... சுகாதாரத்துறை ஏற்பாடுகள் என்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

=> வடகிழக்கு பருவமழை நெருங்கும் நிலையில் சுகாதார ஏற்பாடுகள் எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்த கேள்விக்கு...

கடந்த நான்காண்டுகளாக தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலோடு இந்த அரசு பொறுப்பேற்ற பின் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக உள்ளாட்சித் துறை, நகர்ப்புற உள்ளாட்சித் துறை என பல்வேறு சேவைகளை ஒருங்கிணைத்து மாவட்ட அளவிலான மாநில அளவிலான உயர் அலுவலர்கள் அமைச்சர்கள் எல்லாம் பங்கேற்று கூட்டம் நடத்தப்பட்டது.

கடந்த வாரம் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்றோம். அதில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது எப்படி, ஏற்படும் பாதிப்புகளை எப்படி சமாளிப்பது கூடுதலான பாதிப்புகள் வரும் பொழுது எப்படி எதிர்கொள்வது போன்ற பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற கூட்டத்தில், ஒவ்வொரு துறைகளும் செய்ய வேண்டிய கடமைகள் பணிகள் குறித்து கையேடுகள் தயாரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கு சென்று துறைகளை எல்லாம் மாவட்ட வாரியாக ஒருங்கிணைத்து கூட்டங்களை நடத்தி மிகப்பெரிய அளவில் பருவமழை பாதிப்புகளை இல்லாமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கைகளை முதல்வர் வழிகாட்டுதலுடன் செய்து வருகிறோம்.

மக்கள் நல்வாழ்வுத்துறையை பொறுத்தவரை கடந்த ஒவ்வொரு பருவமழைக்கும் 10 ஆயிரம் மருத்துவ முகங்கள் என்று, குறிப்பாக மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் அறிவிக்கப்பட்டு அதிகபட்சம் 30 ஆயிரம் முகாம்கள் வரை நடத்தியுள்ளோம்.

கடந்த புயல் காலத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டு அதிக பாதிப்பு ஏற்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் கூடுதல் மருத்துவ முகாம்கள் நடத்தி பாதிப்புக்கான அரிச்சுவடியே இல்லாத வகையில் அவற்றை சரி செய்திருக்கிறோம்.

ஏதாவது ஒரு கிராமத்தில் மூன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அங்கு முகாம் அமைத்து அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலர்கள் அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

நெருங்கும் வடகிழக்கு பருவமழை... சுகாதாரத்துறை ஏற்பாடுகள் என்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

=> வடகிழக்கு பருவமழை நெருங்கும் நிலையில் நீர் வழி இருப்பிடங்களுக்கு பாதுகாப்பு எந்த அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு...

நீர் வழி இடங்கள் என்பதை பொறுத்தவரை அடையாறு ஆற்றங்கரை பொருத்தவரை சாரதி நகர், துரைசாமி தோட்டம், நாராயணசாமி தோட்டம், விநாயகபுரம், ஜோதி தோட்டம், திடீர் நகர், சூரியா நகர் போன்ற பகுதிகள் அடையார் ஆற்றங்கரையோரம் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டால் கூட பாதிப்பு இல்லாத வகையில் அகலப்படுத்தப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் தொடர்ந்து அணையின் கொள்ளளவு கண்காணித்து தேவைக்கேற்ப அவ்வப்போது நீரை வெளியேற்ற அறிவுறுத்தி இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு ஒரே நாளில் ஒரு லட்சம் கன அடி அளவிற்கு தண்ணீர் திறந்த காரணத்தால் தான் சென்னையே பெரும் பாதிப்புக்கு உள்ளானது.

நீர்நிலைகள் அளவை தொடர்ந்து கண்காணித்து ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் முதலமைச்சர் அவரே நேரில் ஆய்வு மேற்கொள்வது விளைவாக ஐந்தாண்டுகளில் நீர்நிலை ஓரங்களில் இருக்கும் மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

banner

Related Stories

Related Stories