தமிழ்நாடு

61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!

திருவண்ணாமலை அருகே லிப்ட் கொடுப்பதாக கூறி மூதாட்டியிடம் நகையை கொள்ளையடித்த தவெக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஒண்டி குடிசை கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி மலர் (61). இவர் கணவரை இழந்து தனியாக கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த சூழலில் இவர் சென்னையில் உள்ள தனது மகன் சீனிவாசனை பார்த்து விட்டு மீண்டும் தனது சொந்த கிராமத்திற்கு செல்ல கடந்த 10ம் தேதி அப்பந்தங்கள் கூட்ரோடு அருகில் இறங்கி தனது கிராமத்திற்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது பைக்கில் வந்த கௌதம் (30) என்ற இளைஞர், தான் மொரபந்தாங்கல் கிராமத்துக்கு செல்வதாகவும், தங்களை அங்கே இறக்கி விடுவதாகவும் கூறி தனது பைக்கில் லிப்ட் கொடுத்துள்ளார். இதனையடுத்து மொரப்பந்தாங்கல் கிராமம் அருகில் வரும்போது திடீரென பைக்கை நிறுத்திவிட்டு பைக்குக்கு பெட்ரோல் நிரப்பி வருவதாகவும் கூறி மூதாட்டியை இறக்கி விட்டுள்ளார்.

61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!

இதனால் அந்த மூதாட்டியும் இறங்கி நிற்க, கண் இமைக்கும் நேரத்தில் மூதாட்டி கழுத்தில் அணியிருந்த 3 சவரன் தங்க நகையை பறிக்க முயன்றுள்ளார் அந்த இளைஞர். இதனால் அந்த மூதாட்டி கத்தி கூச்சலிடவே உடனே அவரை தாக்கிவிட்டு, கீழே தள்ளி அவரது தனது கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து இச்சம்பவம் குறித்து மூதாட்டி மலர் ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அப்பந்தாங்கலல் கூட்ரோடில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்தனர்.

61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!

அப்போது இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது இராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பகுதியை சேர்ந்த கௌதம் (30) என்பதும், MBA பட்டதாரியான இவர் தமிழக வெற்றி கழகத்தின் பிரமுகர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து குற்றச்செயலில் ஈடுபட்ட தவெக பிரமுகர் கௌதமை கடித்து செய்த போலீசார், அவர் மீது 3 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து குற்றவாளி கௌதமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே போலீசார் விசாரணையில், தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி மாநாட்டிற்கு சென்றதால் கடன் சுமை ஏற்பட்டதாகவும், இதனால் மூதாட்டியிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தவெக பிரமுகர் கௌதம் விசாரணையில் தெரிவித்து உள்ளார்.

banner

Related Stories

Related Stories