PM Internship எனப்படுகிற பிரதமர் இன்டன்ஷிப் திட்டம் செயல்படுத்தப்படும் முறை, அதில் நிலவும் தேக்கங்கள் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி MP மக்களவையில் கேள்விகளை எழுப்பினார்.
“PM Internship எனப்படுகிற பிரதமர் இன்டன்ஷிப் திட்டம் தொடங்கப் பட்டதிலிருந்து அத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற இளைஞர்களின் எண்ணிக்கை எத்தனை?
இத்திட்டத்தை செயல்படுத்துதலில் தனியார் நிறுவனங்களுடன் போதுமான ஒருங்கிணைப்பு இல்லாததால், PM Internship இல் குறைந்த அளவிலான இளைஞர்களே பங்கேற்கிறார்கள் என்பதை ஒன்றிய அரசு அறிந்துள்ளதா?
அப்படியானால் இத்திட்டத்தின் செயல்திறனை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? இத்திட்டத்தின் கீழ் மிகக் குறைந்த ஆட்சேர்ப்புக்கான காரணங்களைக் கண்டறிய அரசாங்கம் ஏதேனும் மதிப்பாய்வு அல்லது மதிப்பீட்டை நடத்தியதா?
அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?. PM Internship திட்டத்தை மிகவும் பயனுள்ள வகையில் மறுசீரமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?”
ஆகிய கேள்விகளை கனிமொழி எம்பி எழுப்பியுள்ளார்.