நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரில் விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் ரவிக்குமார், ராஜாராம் மோகன்ராய் லைப்ரரி ஃபவுண்டேஷனால் 204-15 முதல் கடந்த 10 ஆண்டுகளில் மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட / ஒப்புதல் தரப்பட்ட / நிராகரிக்கப்பட்ட திட்டங்களின் விவரங்கள் என்ன? அந்தத் திட்டங்கள் நிறைவு பெற்றனவா? என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த கேள்விக்கு கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் அளித்துள்ள பதில் மூலம் நூகலகங்களுக்கு நிதி ஒதுக்குவதிலும் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு பாரபட்சத்துடன் இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மொத்தமுள்ள பொது நூலகங்களில் நான்கில் மூன்று பங்கு தென் மாநிலங்களில்தாம் உள்ளன. ஆனால் குஜராத் மாநிலத்துக்கு அதிக அளவிலான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி இருந்தவரை ஒப்பீட்டளவில் அதிக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுக ஆட்சி அமைந்த பிறகு (2021) நிதி குறைக்கப்பட்டிருக்கிறது.
2014-15 ஆம் ஆண்டில் 4571 திட்டங்களுக்கு ரூ 5,16,34,057 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது;
2015-16 ஆம் ஆண்டில் 2303 திட்டங்களுக்கு ரூ 5,91,76,420 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
2016-17 ஆம் ஆண்டில் 4534 திட்டங்களுக்கு ரூ 63,29,493 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
2017-18 ஆம் ஆண்டில் 5207 திட்டங்களுக்கு ரூ 10,07,11,709 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
2018-19 ஆம் ஆண்டில் 1062 திட்டங்களுக்கு ரூ 9,66,05,385 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது;
2019- 20 ஆம் ஆண்டில் 1651 திட்டங்களுக்கு ரூ 3,98,38,421 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
2020- 21 ஆம் ஆண்டில் 1126 திட்டங்களுக்கு ரூ 2,03,02,195 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
2021- 22 ஆம் ஆண்டில் 7 திட்டங்களுக்கு ரூ 15,27,705 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
2022- 23 ஆம் ஆண்டில் 7 திட்டங்களுக்கு ரூ 14,40,000 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது;
2023- 24 ஆம் ஆண்டில் 1071 திட்டங்களுக்கு ரூ 4,03,13,606 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
2024- 25 ஆம் ஆண்டில் 2 திட்டங்களுக்கு ரூ 3,75,000 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு நான்கு ஆண்டுகளுக்கும் சேர்த்து 1087 திட்டங்களுக்கு மட்டுமே நிதி வழங்கப்பட்டிருக்கிறது.
நிதி ஒதுக்குவதில் எப்படி ஒன்றிய பாஜக அரசு அரசியல் அடிப்படையில் பாரபட்சம் காட்டுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.