தமிழ்நாடு

”எடப்பாடி பழனிசாமியின் வயிற்றெரிச்சலுக்கு இதுதான் காரணம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் நாம் கொண்டு செல்கிறோம்.

”எடப்பாடி பழனிசாமியின் வயிற்றெரிச்சலுக்கு இதுதான் காரணம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றையதினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாநகர் சூழ் பகுதி மற்றும் நகர்புற பகுதிகளில் சிறப்பு வரன்முறைத் திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் 1672.52 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பட்டாக்களை 20,021 பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"மே 2021-லிருந்து, தற்போது வரைக்கும் வழங்கப்பட்டிருக்கும் மொத்த பட்டாக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 17 இலட்சத்து 74 ஆயிரத்து 561 பேருக்கு பட்டா வழங்கியிருக்கிறோம்! அதாவது பல இலட்சம் குடும்பங்களின் கனவை நிறைவேற்றியிருக்கிறோம்! இதில், இந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும், 41 ஆயிரத்து 858 பேருக்கு பட்டா வழங்கியிருக்கிறோம்.

இந்த மகிழ்ச்சியோடுதான், இதன் தொடர்ச்சியாக இன்றைக்கு இந்த மாபெரும் விழாவில், ஆயிரத்து 672 கோடியே 52 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்களை 20 ஆயிரத்து 21 பயனாளிகளுக்கு நான் வழங்கியிருக்கிறேன்.

2011-லிருந்து 2021 வரைக்கும் பத்தாண்டுகாலம் பின்னோக்கிச் சென்ற தமிழ்நாட்டை, இந்த நான்கு ஆண்டுகளில், மீட்டெடுத்து, வளர்ச்சி பாதையின் உச்சத்திற்கு கொண்டு நாம் சேர்த்திருக்கிறோம்! இதை பொறுத்துக்கொள்ள முடியாத மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு.பழனிசாமி அவர்கள், அவர்களின் நண்பரான ஒன்றிய அரசு கொடுத்த புள்ளிவிவரத்தையே சரியில்லை என்று பேசுகிறார்! அவருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம்… வளர்ச்சியின் அளவீடு என்பது, பொருளாதார அளவுகோல்தான்!

இந்த அடிப்படை கூட தெரியாமல், அறிவுஜீவி போல இன்றைக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு என்ன வயிற்றெரிச்சல் என்றால், இந்திய அளவில் பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை - மற்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர்கள் சாதிக்க முடியாததை - இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சாதித்துக் கொண்டிருக்கிறானே! இதுதான் அவர்கள் வயிற்றெரிச்சலுக்குக் காரணம்!

பழனிசாமி அவர்களே… நீங்கள் கூட்டணி வைத்திருக்கும் ஒன்றிய அரசால்கூட மறைக்க முடியாத - மறுக்க முடியாத அளவிற்கு சாதனைகள் செய்து தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் நாம் கொண்டு செல்கிறோம். இதுமட்டுமல்ல, திராவிட மாடல் 2.0-வில் இன்னும் வேகமாக, இன்னும் அதிகமான வளர்ச்சியை ஏற்படுத்துவோம்! இந்திய நாடே தமிழ்நாட்டை திரும்பி பார்த்து, “இதுதான் வளர்ச்சி! இதுதான் வழி!” என்று சொல்லும் அளவிற்கு நிச்சயமாக செயல்படுவோம்! அதை நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்து பார்க்கத்தான் போகிறீர்கள்!

banner

Related Stories

Related Stories