தமிழ்நாடு

தமிழ்நாட்டில் நீர்ப்பாசன பரப்பளவை விரிவுபடுத்த வேண்டும் : ஒன்றிய அரசுக்கு ஆ.மணி MP வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் நீர்ப்பாசன பரப்பளவை விரிவுபடுத்த வேண்டும் என ஒன்றிய அரசுக்கு ஆ.மணி எம்பி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் நீர்ப்பாசன பரப்பளவை விரிவுபடுத்த வேண்டும் : ஒன்றிய அரசுக்கு ஆ.மணி MP வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளிலும் நடப்பு ஆண்டிலும் பெரிய மற்றும் சிறு நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலம் பாசனத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட மொத்த பரப்பளவு விவரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் தர்மபுரி மக்களவை உறுப்பினர் ஆ. மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில் அவர் கேட்டுள்ளதாவது:

தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கான குறிப்பிட்ட புள்ளிவிவரங்களுடன், மேற்கூறிய காலகட்டத்தில் பல்வேறு மத்திய மற்றும் மாநில திட்டங்களின் கீழ் தமிழ்நாட்டில் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதியின் விவரங்கள் என்ன?

நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் நீர்ப்பாசனப் பரப்பளவை விரிவுபடுத்துவதற்கு அரசு ஏதேனும் இலக்குகளை நிர்ணயித்துள்ளதா, அப்படியானால், தர்மபுரியைக் குறிப்பிட்டு மாவட்ட வாரியாக அதன் விவரங்கள் என்ன?

தர்மபுரி மாவட்டத்தை மையமாகக் கொண்டு, தமிழ்நாட்டில் தற்போதுள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்பை நவீனமயமாக்கவும் மேம்படுத்தவும், விவசாயிகளிடையே சமமான நீர் விநியோகத்தை உறுதி செய்யவும் அரசு எடுத்த குறிப்பிட்ட நடவடிக்கைகள் என்ன?

நீர் பாதுகாப்புக்கான நிதி உதவி

நாட்டின் கிராமப்புறங்களில் நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு தொடர்பான திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டிய தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவி குறித்து பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தின் (NRDWP) கீழ் ஏதேனும் வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டிருந்தால் அதன் விவரங்களையும் அவர் கோரியுள்ளார்.

banner

Related Stories

Related Stories