தமிழ்நாடு

கொரோனா வைரஸின் புதிய வகைகள் பரவுகின்றதா? : ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!

கொரோனா வைரஸின் புதிய வகைகள் பரவுகின்றதா? என மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸின் புதிய வகைகள் பரவுகின்றதா? : ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2025 கோடை காலத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO) இந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனா பாதிப்புகள் திடீரென அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுத்தளதை குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் திமுக நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் ஆ. இராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

நிம்பஸ் மற்றும் XFG போன்ற சிறப்பு வகைகள் கொரோனாவின் புதிய அலை பரவுவதற்கு முக்கிய காரணம் எனும் செய்தி உண்மையா? அதன் விவரங்கள் என்ன? மற்றும் இத தடுப்பதற்கு மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளை வழங்குதல் உட்பட அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட செயல் திட்டம் குறித்த விவரங்கள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.

ஆதரவற்ற குழந்தைகளை பாதுக்காக்க நடவடிக்கை என்ன?

நாடு முழுவதும் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் நலன் மற்றும் மறுவாழ்வுக்காக ஏற்படுத்திய மிஷன் வத்சல்யா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை உறுப்பினர்கள் ஜி. செல்வம் மற்றும் சி.என்.அண்ணாதுரை கேள்வி எழுப்பியுள்ளனர். அதன் விவரங்கள் பின்வருமாறு:

இத்திட்டத்தின் நோக்கங்கள், முக்கிய கூறுகள் யாவை? குழந்தை பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் வளர்ச்சியை உறுதி செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?

குழந்தைப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வகுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் என்ன? கடந்த மூன்று ஆண்டுகளிலும் நடப்பு ஆண்டிலும் இந்த திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட நிதி உதவியின் விவரங்கள் என்ன?

மாநிலங்களில் மாவட்ட வாரியாக, இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்த குழந்தைகளின் எண்ணிக்கையை வெளியிடுக?. மிஷன் வாத்சல்யாவின் கீழ் பங்குதாரராக செயல்படும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் வகைகள் என்ன?

banner

Related Stories

Related Stories