தமிழ்நாடு

”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

அறியாமை இருளில் எடப்பாடி பழனிசாமி மூழ்கி இருக்கிறார் என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்படி ஒரு துறை இருக்கிறது என்பதே மக்களுக்கு கழக ஆட்சியில்தான் பரிட்சயமாகி இருக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறையின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவினர் தொடர்ச்சியாக தி.மு.க அரசு மீது அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.

இந்நலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோயில் பணத்தை எடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு பயன்படுத்துகிறார்கள் என கூறியுள்ளார். இதற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,””வரலாறு தெரியாமல் அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. கோவில் நிதியில் பல கல்லூரிகள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளன. மாணவர்கள் நலனுக்காக கல்லூரி கட்டுவது எப்படி தவறாகும்?” என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

banner

Related Stories

Related Stories