தமிழ்நாடு

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்... விடுபட்ட மகளிர் விண்ணப்பிக்கலாம்: சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு என்ன ?

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்... விடுபட்ட மகளிர் விண்ணப்பிக்கலாம்: சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமுக்கு சென்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.07.2025 அன்று "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நடத்தப்படும் முகாமினை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் 15.7.2025 அன்று மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-25, தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட வார்டு-38, திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-76, தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட வார்டு-109, வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-143 மற்றும் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வார்டு-168 ஆகிய 6 வார்டுகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் தொடங்கி நடைபெறவுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்... விடுபட்ட மகளிர் விண்ணப்பிக்கலாம்: சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு என்ன ?

இதனையொட்டி, இந்த 6 வார்டுகளிலும் தன்னார்வலர்கள் வாயிலாக வீடு வீடாகச் சென்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் 13 அரசு துறைகளின் வாயிலாக 43 சேவைகள் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (07.07.2025) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வார்டுகளில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.

மேலும், 16.07.2025 அன்று "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமானது, திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-1, மணலி மண்டலத்திற்குட்பட்ட வார்டு-20, அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-79, அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-94, ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-167, அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வார்டு-179 ஆகிய 6 வார்டுகளில் தொடங்கி நடைபெறவுள்ளது. இந்த 6 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணியானது நாளை (08.07.2025) முதல் தொடங்கி நடைபெறும்.

மக்களுக்கு வழங்கப்படும் தகவல் கையேட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, எரிசக்தித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை உள்ளிட்ட 13 அரசுத்துறைகள் மூலம் வழங்கப்படவுள்ள 43 சேவைகள் குறித்த முழு விவரங்கள், பயன்களுக்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்த விவரங்கள் உள்ளன.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்... விடுபட்ட மகளிர் விண்ணப்பிக்கலாம்: சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு என்ன ?

மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறும் நாளன்று நேரடியாகச் சென்று, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.

இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.

இந்தப் பணி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் முகாம் நடைபெறும் வார்டில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

banner

Related Stories

Related Stories