தமிழ்நாடு

வீட்டிற்குள் புகுந்து மின்சாரத்தை துண்டித்து அராஜகம் : பெண்களை ஆபாசமாக பேசிய அதிமுக நிர்வாகி!

காஞ்சிபுரம் அருகே வீட்டிற்குள் புகுந்து பெண்களை ஆபாசமாக பேசிய மிரட்டும் அதிமுக பிரமுகரின் அராஜக வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீட்டிற்குள் புகுந்து மின்சாரத்தை துண்டித்து அராஜகம் : பெண்களை ஆபாசமாக பேசிய அதிமுக நிர்வாகி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட, ஒரகடம் அடுத்த பணப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அ.தி.மு.க-வின் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் ரவி. இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்து வந்துள்ளார்.

இவர், கடந்த அ.தி.மு.க ஆட்சியில், தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் விற்பனை செய்து வரும் மூர்த்தி நகர் மனையில் பெருமாள் - நந்தினி என்ற தம்பதியினர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில், தம்பதியினரை மிரட்டி திடீரென வீட்டை காலி வற்புறுத்தி வருகிறார். இதற்கு அவர்கள் மறுத்ததால் வீட்டிற்குள் புகுந்து, வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளார். மேலும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளை துண்டித்துள்ளார். நந்தினியை ஆபாசமாக பேசியுள்ளார்.

இவரது ஆசைக்கு அந்த பெண் மறுத்தால், இப்படி அராஜகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது குறித்து ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை திரும்பபெற வற்புறுத்தியும் நந்தினையை தொடர்ந்து அ.தி.மு.க நிர்வாகி அச்சுறுத்தி வருகிறார்.

banner

Related Stories

Related Stories