தமிழ்நாடு

"4 மாதத்தில் சுமார் 91,000 பேர் சீர்மரபினர் நல வாரியத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்"- அமைச்சர் மெய்யநாதன் !

4 மாதத்தில் சுமார் 91,000 பேர் சீர்மரபினர் நல வாரியத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

"4 மாதத்தில் சுமார் 91,000 பேர் சீர்மரபினர் நல வாரியத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்"- அமைச்சர் மெய்யநாதன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் இன்று (23.06.2025) பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவில், 2100 பயனாளிகளுக்கு நல வாரிய உறுப்பினர் அட்டைகளையும், 84 பயனாளிகளுக்கு ரூ.21.42 இலட்சம் என மொத்தம் 2184 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் வழங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளிம்பு நிலையில் இருக்கின்ற அடித்தட்டு மக்கள் பயன்பெற வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சீர்மரபினர் என்று அழைக்கப்படுகின்ற 68 சமூகங்களை சார்ந்த மக்கள் பயன்பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களால் சீர்மரபினர் நல வாரியம் 2007 - ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

தற்போது, முதலமைச்சர் அவர்கள் இந்த நல வாரியத்தை மறு கட்டமைப்பு ஏற்படுத்தி, ஒரு இலட்சம் சீர்மரபினர் உறுப்பினர் சேர்ப்பதற்கு அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், நான்கு மாத காலத்திற்குள் சுமார் 91,000 உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

"4 மாதத்தில் சுமார் 91,000 பேர் சீர்மரபினர் நல வாரியத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்"- அமைச்சர் மெய்யநாதன் !

அடித்தட்டு மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்த நல வாரிய உறுப்பினர்களுக்கு பல்வேறு வகையான பயன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில், மகப்பேறு உதவித்தொகை, மூக்கு கண்ணாடி உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, 60 வயது நிரம்பிய முதியோர்களுக்கான உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு வகையான பயன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலமாக தமிழ்நாட்டில் வீடுகள் கட்டிவிட்டு 50 ஆண்டுகளாக பட்டாக்களுக்காக சிரமப்பட்ட ஏழை, எளிய 16 இலட்சம் மக்களுக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளியில் படித்த ஏழை எளிய மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி, மாணாக்கர்களுக்கு கல்விக்கட்டணம் உட்பட அனைத்து செலவுகளையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் மருத்துவ படிப்புகள் அல்லாது, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் ஆகிய துறைகளை சார்ந்த உயர்கல்வியிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினை ஏற்படுத்தி, அவர்களுக்கான கல்வி கட்டணங்கள் உட்பட அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பினையும் அறிவித்தன் அடிப்படையில், ரூ.911 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 40,611 மாணாக்கர்கள் பயன்பெற்று வாழ்வில் உயர்ந்த நிலை அடைவதற்கு வழிவகை ஏற்படுத்தியுள்ளார்கள்.

கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளிம்பு நிலை மக்களை உயர்த்துகின்ற ஒப்பற்ற திட்டங்களாக எல்லா இடங்களிலும் பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட முதலமைச்சர் எங்களுக்கு காட்டக்கூடிய திசையில் சீர் மரபினர் நல வாரியத்திற்கான பயன்கள் அத்தனையையும் கொண்டு சேர்ப்பதற்கு நடவடிக்கையை மேற்கொள்வோம்" என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories