தமிழ்நாடு

மறுசீரமைப்பு செய்யப்படும் கும்பகோணம் ரயில் நிலையம்... டெண்டர் வெளியிட்டது தெற்கு ரயில்வே !

மறுசீரமைப்பு செய்யப்படும் கும்பகோணம் ரயில் நிலையம்... டெண்டர் வெளியிட்டது தெற்கு ரயில்வே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கும்பகோணத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான ரயில் நிலைய மறுசீரமைப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்பட இருக்கும் நிலையில் அதற்கான டெண்டர் வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் புகழ்பெற்ற யாத்திரை தேசம். வடக்கில் கும்பமேளா போன்று, தெற்கில் கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகம் விழா மிகவும் பிரதிசித்தி பெற்றதாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழா வரும் 2028-இல் நடைபெறவுள்ளது.

மறுசீரமைப்பு செய்யப்படும் கும்பகோணம் ரயில் நிலையம்... டெண்டர் வெளியிட்டது தெற்கு ரயில்வே !

நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் இந்த விழாவில் பங்கேற்க வருவாா்கள்.இதனால், கும்பகோணம் ரயில் நிலையத்தை நவீனப்படுத்தும் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என தெற்கு ரயில்வே முடிவு மேற்க் கொண்டது.

இதற்காக நூறு ஆண்டுகள் பழமையான கும்பகோணம் ரயில் நிலையத்தை நவீன முறையில் புனரமைப்புடன் விரிவாக்கம் செய்திட தெற்கு ரயில்வே ரூ.100 கோடிக்கு டெண்டர் விடுத்துள்ளது. இந்த ரயில் நிலைய பணிகள் விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories