தமிழ்நாடு

நடுரோட்டில் பள்ளி மாணவி மீது தாக்குதல்.. அதிமுக பிரமுகர் மீது பாய்ந்த வழக்கு... போலீஸ் வலைவீச்சு!

நடுரோட்டில் பள்ளி மாணவி மீது தாக்குதல் நடத்திய அதிமுகவை சேர்ந்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

நடுரோட்டில் பள்ளி மாணவி மீது தாக்குதல்.. அதிமுக பிரமுகர் மீது பாய்ந்த வழக்கு... போலீஸ் வலைவீச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை இராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சூர்யா (18). அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை 118வது வட்டச் செயலாளராக இருக்கும் இவர், பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் தற்போது பள்ளி மாணவிக்கு நடு சாலையில் வைத்து தொல்லை கொடுத்ததாக இவர் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது சம்பவத்தன்று சென்னை இராயப்பேட்டை மியூசிக் அகாடமி அருகே சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவியை காதலிக்க சொல்லி கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். அதற்கு அடி பணியாத அந்த மாணவியை கன்னத்தில் அறைந்து தாக்கியுள்ளார். மேலும் தன்னை காதலிக்கவில்லை என்றால் குடும்பத்தையே கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

மாணவியை நடுரோட்டில் தாக்குவதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் இளைஞரையும் அவருடன் அந்த மற்றொரு நபரை கேள்வி கேட்டனர். மேலும் அவர்கள் இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைக்க நினைத்தபோது, அங்கிருந்து இருவரும் தப்பித்து ஓடிவிட்டனர். இதைத்தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

நடுரோட்டில் பள்ளி மாணவி மீது தாக்குதல்.. அதிமுக பிரமுகர் மீது பாய்ந்த வழக்கு... போலீஸ் வலைவீச்சு!

அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியிடம் நடந்தவற்றை புகாராக பெற்றுக்கொண்டு, போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் இராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்போது விசாரிக்கையில், மாணவிக்கு தொல்லை கொடுத்தது அதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சூர்யா என்றும், அவருடன் வந்தது அவரது கூட்டாளி என்றும் தெரியவந்தது. தற்போது தலைமறைவாக உள்ள அதிமுக பிரமுகர் சூர்யாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு காரில் மது பாட்டில்கள் விற்பனை செய்த வழக்கில் சூர்யாவை இராயப்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். சிறையில் இருந்து வெளிவந்த பின் மது பாட்டில்கள் விற்பனை மற்றும் சமூக விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் தனது மாமாவும் ரவுடியுமான அதிமுக வட்ட துணைச் செயலாளர் கானா ஆறுமுகத்தின் பெயரைச் சொல்லி அந்த பகுதியில் உள்ள கடைகளில் மாமூல் வசூல், உணவகங்களில் இலவச பிரியாணி கேட்டு மிரட்டல் என தொடர்ந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories